ஜோவிகாவுக்கு முன்னாடியே வனிதா விஜயகுமார் மகன் ஹீரோவாகிறாரா?.. அதுவும் அந்த பிரபல இயக்குநர் படத்திலா?

சென்னை: நடிகை வனிதா விஜயகுமாரின் மகன் விஜய் ஸ்ரீஹரி சீக்கிரமே பிரபல இயக்குநர் இயக்கத்தில் ஹீரோவாக போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே வாரிசு நடிகரை ஹீரோவாக்கி அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த இயக்குநர் தான் இந்த படத்தையும் இயக்கப் போகிறார் என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

நடிகர் விஜயகுமார் மற்றும் மறைந்த நடிகை மஞ்சுளாவுக்கு மகளாக பிறந்தவர் வனிதா விஜயகுமார். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக நாட்டாமை விஜயகுமார் உண்மையாகவே வனிதாவை ஒதுக்கி வைத்து விட்டார். சமீபத்தில், நடைபெற்ற பேத்தி திருமணத்துக்கு கூட வனிதாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

Prabhu Solomon wish to introduce Vanitha Vijayakumar son Vijay Sri Hari

வனிதாவுக்கு ஆகாஷ் என்பவருக்கும் பிறந்த குழந்தை தான் ஸ்ரீஹரி. படித்துக் கொண்டிருந்த அவருக்கும் தற்போது நடிப்பின் மீது ஆசை வந்து விட்டதாக கூறுகின்றனர். தங்கை ஜோவிகா ஹீரோயின் ஆவதற்கு முன்பே ஸ்ரீஹரி ஹீரோ ஆகிடுவார் போல தெரிகிறது.

முன்னாள் கணவர் மகன்: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த வனிதா விஜயகுமார், நடிகர் விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா படத்தில் அறிமுகமானார். 1995ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமான வனிதா, 2000ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் பிறந்தவர் தான் ஸ்ரீஹரி. 2007ல் முதல் கணவரை விவாகரத்து செய்து விட்டு ஆனந்த் ஜெயராமன் என்பவரை அதே ஆண்டு திருமணம் செய்து கொண்டார் வனிதா விஜயகுமார்.

மகன் வேண்டும்: விவாகரத்துக்கு பிறகு தன்னுடைய மகன் தன்னிடம் தான் இருக்க வேண்டும் என ஆகாஷ் தொடுத்த வழக்கில் அவர் வெற்றிப் பெற்ற நிலையில், ஸ்ரீஹரி ஆகாஷ் உடனே வளர்ந்து வருகிறார். ஆனந்த் ஜெயராமனை திருமணம் செய்து கொண்ட வனிதா விஜயகுமார் கடந்த 2012 மன வருத்தம் காரணமாக அவரையும் பிரிந்தார். சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை 3வதாக திருமணம் செய்து கொண்ட வனிதா பின்னர் ஏற்பட்ட ஏகப்பட்ட பிரச்சனைகள் காரணமாக அவரையும் பிரிந்து தனது மகள்களுடன் வாழ்ந்து வருகிறார். முதல் கணவர் ஆகாஷுக்கு பிறந்த ஜோவிகா வனிதாவுடன் வளர்ந்து வருகிறார். இரண்டாம் கணவருக்கு பிறந்த ஜெய்னிதா தந்தையுடன் வளர்ந்து வருகிறார்.

Prabhu Solomon wish to introduce Vanitha Vijayakumar son Vijay Sri Hari

ஆகாஷ் மகன்: கடந்த ஆண்டு தனது மகன் ஸ்ரீஹரியின் பிறந்தநாளை முன்னிட்டு "என் லட்டு பிறந்து 21 ஆண்டுகள் ஆகிறது. நான் அம்மாவாகி 21 வருஷம் ஆகுது, என் திறமையான மகன் எப்போதுமே எல்லாவற்றிலும் சாதிக்க வேண்டும்" என பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியிருந்தார். வனிதாவின் போஸ்ட்டுக்கு கீழ் ஏகப்பட்ட ரசிகர்கள் அவரது மகன் ஸ்ரீஹரியை வாழ்த்தி வந்தனர். இந்நிலையில், ஸ்ரீஹரியின் சமூக வலைதள பக்கத்தில் ஒரு நெட்டிசன், நீங்க வனிதா மகனா? என கேள்வி எழுப்ப.. அதற்கு நான் ஆகாஷ் மகன் என ஸ்ரீஹரி பதில் அளித்து அம்மாவின் மனதை கஷ்டப்படுத்தியிருந்தார்.

Prabhu Solomon wish to introduce Vanitha Vijayakumar son Vijay Sri Hari

பிரபு சாலமன் இயக்கத்தில்: மைனா, கும்கி, தொடரி கடைசியாக வெளியான செம்பி உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபு சாலமன் இயக்கத்தில் அடுத்து உருவாக உள்ள படத்தில் ஸ்ரீஹரி ஹீரோவாக நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. விஜயகுமாரின் பேரன் ஹீரோவாகப் போகிறாரா? என சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X