Don't Miss!
- Automobiles வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- News அசத்திட்டாங்க இஸ்லாமியர்கள்.. இதுதான் எங்க தமிழ்நாடு.. நாட்டிற்கே உதாரணமாய் மாறிய தஞ்சாவூர் திருவிழா
- Technology சீன வாட்ச்களை சுளுக்கு எடுத்த இந்திய கம்பெனி.. விலை கம்மி ஆனா 8 நாள் பேட்டரி, கொரில்லா கிளாஸ் 3, IP68 இருக்கு!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
முதலில் ஆரம்பம் ரீமேக், அடுத்து நேரடியாக அஜீத்: இது பிரபுதேவா திட்டம்
மும்பை: அஜீத்தை இயக்க ஆசைப்படுகிறார் மசாலா மன்னன் பிரபுதேவா. இந்நிலையில் அவர் தான் ஆரம்பம் படத்தின் இந்தி ரீமேக்கை இயக்குவார் என்று கூறப்படுகிறது.
பாலிவுட் மசாலா மன்னன் என்று பெயர் எடுத்துள்ளார் பிரபுதேவா. அவரிடம் ரீமேக் படங்களை கொடுத்தால் நச்சுன்னு எடுத்து பட்டுன்னு ஹிட்டாக்கிவிடுவார் என்று பாலிவுட்டில் பேசப்படுகிறது.
இந்நிலையில் அஜீத்தின் ஆரம்பம் படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது.
அக்கி
ஆரம்பம் இந்தி ரீமேக்கில் அக்ஷய் குமார் நடிக்கவிருக்கிறார். முன்னதாக அவர் பிரபுதேவாவின் சிறுத்தை ரீமேக்கில் கார்த்தி கதாபாத்திரத்தில் நடித்தார். படமும் ஹிட்டானது.
பிரபுதேவா
ஆரம்பம் இந்தி ரீமேக்கை பிரபுதேவா இயக்குவார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே ரவுடி ராத்தோரில் சேர்ந்த அக்கியும், பிரபுவும் இந்த படத்திலும் சேர்வார்கள் என்று தெரிகிறது.
அஜீத்
பிரபுதேவாவுக்கு அஜீத் குமாரை வைத்து தமிழில் ஒரு படத்தை இயக்க ஆசையாக உள்ளதாம். தற்போது கையில் உள்ள படங்களை முடித்துவிட்டு அஜீத்தை அணுகுவார் என்று கூறப்படுகிறது.
ஆர்...ராஜ்குமார்
ஷாஹித் கபூர், சோனாக்ஷியை வைத்து பிரபுதேவா இயக்கிய ஆர்...ராஜ்குமார் படம் வரும் டிசம்பர் மாதம் 6ம் தேதி ரிலீஸாகிறது. இந்த படத்தை பிரபுதேவா பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.