GOAT படத்தை நயன்தாரா வேண்டாம்னு சொல்ல உண்மையான காரணமே அவர்தானா?.. நல்லவேளை எஸ்கேப்!
சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி வெளியானது. முதல் நான்கு நாட்கள் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக தமிழ்நாட்டில் ஓடிய அந்த திரைப்படம் மற்ற இடங்களில் பெரிதாக ரசிகர்களை கவரவில்லை.
விஜய் படத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஏகப்பட்ட ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜயகாந்த், சூர்யா, ஷாருக் கான் என மற்ற நடிகர்களையும் அவர்களது ரசிகர்களையும் கவரும் விதமாக வெங்கட் பிரபு ரெஃபரன்ஸ்களை அடுக்கி இருந்தார். சிஎஸ்கே மேட்ச், தோனி என காட்டி கிரிக்கெட் ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தினார்.

மேலும் கேமியோவாக த்ரிஷா மற்றும் சிவகார்த்திகேயன் நடித்து இருந்தனர். இந்த விஷயங்கள் தான் போட்ட காசையாவது ஏஜிஎஸ் நிறுவனம் எடுக்கும் அளவுக்கு படத்தை நகர்த்தியது என்கின்றனர்.
ஜோதிகாவுடன் பேச்சுவார்த்தை: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த கோட் படத்தில் முதலில் ஜோதிகா தான் விஜய்க்கு ஜோடியாகவும் அம்மாவாகவும் நடிக்கப் போகிறார் என்கிற தகவல்கள் சினிமா வட்டாரத்தில் பரவின. ஆனால், அதற்கு சூர்யா தரப்பு சம்மதம் தெரிவிக்கவில்லை என்றும் அதனால், ஜோதிகா அந்தப் படத்தை நிராகரித்து விட்டார் என்றும் பேச்சுக்கள் அடிபட்டன.
நயன்தாரா தான் தீர்வு: ஆனால், வெங்கட் பிரபு அளித்த பேட்டியில் ஜோதிகா பற்றி எதுவுமே பேசிக் கொள்ளாமல் வில்லு மற்றும் பிகில் உள்ளிட்ட படங்களில் விஜயுடன் இணைந்து நடித்த நயன்தாரா தான் கோட் படத்தில் விஜய்க்கு மனைவியாகவும் அம்மாவாகவும் நடிக்க வைக்க திட்டமிட்டதாக கூறினார். ஆனால், சில காரணங்களுக்காக நயன்தாரா கோட் படத்தை தேர்வு செய்யவில்லை என கூறியுள்ளார்.
பிரபுதேவா தான் காரணம்?: நடிகை நயன்தாராவின் முன்னாள் காதலனான பிரபுதேவா கோட் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த நிலையில், அதுதான் நயன்தாரா இந்த படத்தை ஓகே சொல்லாததற்கு காரணம் என்று சில தகவல்கள் சினிமா வட்டாரத்தில் உலா வருகிறது. சினேகாவுடன் பிரபுதேவா இருக்கும் காட்சிகளும் கோட் படத்தில் இடம்பெற்ற நிலையில், நயன்தாரா எடுத்தது நல்ல முடிவுதான் என்றும் விஜய்க்கு அம்மாவாக எல்லாம் அவர் நடித்து இருந்தால் நன்றாக இருக்காது என்றும் கூறி வருகின்றனர்.

சினேகா தான் சரி: தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தை பொறுத்தவரையில் ஹீரோயினுக்கு பெரிதாக வேலை கிடையாது என்றும் கோவா படத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்த சினேகா வசீகரா படத்திற்கு பிறகு பல வருடங்கள் கழித்து விஜய்யுடன் இணைந்து நடித்தது தான் சரியான தேர்வு என்றும் வேறு யாரும் செட்டாகி இருக்க மாட்டார்கள் என்றும் ரசிகர்கள் கூறுகின்றனர்.
400 கோடி போஸ்டர் வருமா?: கோட் படம் வெளியாகி 4 நாட்களில் 288 கோடி வசூல் என அர்ச்சனா கல்பாத்தி கடைசியாக ட்வீட் போட்டதுடன் சரி. அதன் பின்னர், தளபதி டேக் ஓவர் என்று மட்டுமே முட்டுக் கொடுத்து வருகிறார். 300 கோடி பிளஸ் அல்லது 400 கோடி வசூல் செய்தது கோட் போன்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருமா? என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். ஆனால், பாக்ஸ் ஆபிஸில் பெரிய சாதனையை அந்த படம் நிகழ்த்தாத நிலையில் தான் அர்ச்சனா கல்பாத்தியே அமைதியாக உள்ளார் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











