அப்போ ரஜினிகாந்த்.. இப்போ ரஜினியோட நண்பர்.. யோகி ஆதித்யநாத்தை சந்தித்த பிரபுதேவா.. என்ன விஷயம்?

உத்தர பிரதேசம்: ஜெயிலர் படத்தின் வெற்றிக்குப் பிறகு வட இந்தியாவுக்கு டூர் அடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து அவரது கால்களை தொட்டு வணங்கிய காட்சிகள் இணையத்தில் வெளியாகி பலரது கவனத்தை கவர்ந்தது. ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து இஸ்லாமியராக ரஜினிகாந்த் நடித்த லால் சலாம் திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றியை பெறவில்லை.

ஞானவேல் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் வெளியான வேட்டையன் படமும் அமிதாப் பச்சன், பகத் ஃபாசில் என மற்ற மாநில நடிகர்கள் நடித்தும் பெரிதாக வெற்றிப் பெறவில்லை. ஆனால், இந்த ஆண்டு வெளியாக காத்திருக்கும் கூலி படம் நிச்சயம் பந்தயம் அடிக்கும் என்றும் ஜெயிலர், லியோவை விட மிகப்பெரிய வசூலை அள்ளும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

Prabhudeva meets Yogi Adithyanath

இந்நிலையில், ரஜினிகாந்தின் நண்பரான மோகன்பாபு தனது மகன் விஷ்ணு மஞ்சு மற்றும் நடனப்புயல் பிரபுதேவாவுடன் இணைந்து யோகி ஆதித்யநாத்தை சந்தித்துள்ளனர்.

கண்ணப்பா புதிய ரிலீஸ் தேதி: இந்த மாதம் ஏப்ரல் 25ம் தேதி கண்ணப்பா திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த படத்திற்கு எதிராக ஏகப்பட்ட நெகட்டிவிட்டி பரவி வரும் நிலையில், ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தனர். இந்நிலையில், யோகி ஆதித்யநாத்தை சந்தித்த நிலையில், தற்போது அவர் முன்னிலையில், புதிய ரிலீஸ் தேதியை கண்ணப்பா படத்தின் தயாரிப்பாளரான மோகன் பாபு மற்றும் ஹீரோவான விஷ்ணு மஞ்சு அறிவித்துள்ளனர். வரும் ஜூன் 27ம் தேதி உலகம் முழுவதும் கண்ணப்பா படம் வெளியாகிறது.

யோகி ஆதித்யநாத்தை சந்தித்த பிரபுதேவா: கண்ணப்பா படத்தின் பாடல்களுக்கு கொரியோகிராஃபி செய்துள்ள நடனப்புயல் பிரபுதேவாவும் மோகன் பாபு மற்றும் விஷ்ணு மஞ்சுவுடன் இணைந்து யோகி ஆதித்யநாத்தை சந்தித்துள்ளார். யோகி ஆதித்யநாத்துக்கு சால்வை எல்லாம் அணிவித்து மரியாதை செலுத்திய காட்சிகள் இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வருகின்றன.

நார்த் இந்தியா புரமோஷன் முக்கியம்: அக்‌ஷய் குமார், பிரபாஸ், மோகன்லால், காஜல் அகர்வால் என ஏகப்பட்ட கேமியோக்கள் விஷ்ணு மஞ்சு ஹீரோவாக நடித்துள்ள கண்ணப்பா படத்தில் நடித்துள்ளனர். டிரைலர் வெளியான பின்னர், கடுமையான விமர்சனங்கள் குவிந்த நிலையில், படத்தின் ரிலீஸை படக்குழு தள்ளி வைத்துள்ளதாக கூறப்பட்டது. வட இந்தியாவில் சரியாக புரமோஷன் செய்து படத்தை பான் இந்தியா ரிலீஸாக வெளியிட்டால் மட்டுமே மிகப்பெரிய லாபத்தை பார்க்க முடியும் என்பதால், தற்போது யோகி ஆதித்யநாத்தை படக்குழு சந்தித்துள்ளதா? என்கிற கேள்விகளை ரசிகர்கள் எழுப்பியுள்ளனர்.

கண்ணப்பா கலக்குமா?: படத்தை சுமார் 150 கோடி ரூபாய் செலவில் நியூசிலாந்தில் படமாக்கியுள்ளனர். பல பெரிய நட்சத்திரங்கள் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ள நிலையில், நாடு முழுவதும் ரசிகர்கள் சப்போர்ட் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்தையும் தாண்டி படத்தின் கன்டென்ட் மற்றும் ஸ்க்ரீன் பிளே தரமாக இருந்தால் தான் வெற்றி பெறும் என்பது தனிக்கதை. பிரபாஸ், மோகன்லால், அக்‌ஷய் குமார் சோலோவாக நடித்த படங்களே சொதப்பிய நிலையில், கண்ணப்பா பாக்ஸ் ஆபீஸில் கலக்குமா என்பது ஜூன் 27ம் தேதி தெரிந்துவிடும் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X