மலையில் விறகு வெட்டும் மூதாட்டியுடன் போட்டோ எடுத்துக் கொண்ட பிரபுதேவா.. குவியும் கமெண்ட்ஸ்!

சென்னை: 'கோட்' படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ள பிரபுதேவா விரைவில் அந்த படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார். மேலும், அனுஷ்காவுடன் மலையாளப் படம், சொந்தமாக சில படங்களிலும் நடித்து மறுபடியும் பிசியாக உள்ள பிரபுதேவா சற்றுமுன் வெளியிட்ட போட்டோ ஒன்று ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்திய சினிமாவின் மைக்கேல் ஜாக்சன் என அழைக்கப்படும் பிரபுதேவாவுக்கு 51 வயதாகிறது. இன்னமும் அவரது காலில் உள்ள வேகம் கொஞ்சம் கூட குறையாமல் அப்படியே இருப்பது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறது.

Prabhudeva GOAT hero

1994ம் ஆண்டு சரத்குமார் நடித்த இந்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரபுதேவா. ஷங்கர் இயக்கத்தில் வெளியான காதலன் படத்தில் ஹீரோவாக நடித்து ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தார்.

நடனப்புயல்: இசைப்புயல் என ஏ.ஆர். ரஹ்மானை கொண்டாடுவதை போல நடனப்புயல் என்றும் இந்தியன் மைக்கேல் ஜாக்சன் என்றும் பிரபுதேவாவை ரசிகர்கள் பல ஆண்டுகளாக கொண்டாடி வருகின்றனர். காதலன் படத்தில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த பிரபுதேவா ராசைய்யா, லவ் பேர்ட்ஸ், மிஸ்டர் ரோமியோ, மின்சார கனவு, விஐபி, நாம் இருவர் நமக்கு இருவர், காதலா காதலா என தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த பிரபுதேவா பல டாப் ஸ்டார்களின் படங்களுக்கு கொரியோகிராஃபியும் செய்துள்ளார்.

விஜய் முதல் சல்மான் கான் வரை: தெலுங்கு படங்களை இயக்க ஆரம்பித்த பிரபுதேவா தமிழில் விஜய் நடித்த போக்கிரி படத்தை இயக்கி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார். அதே படத்தை இந்தியில் வான்டட் என சல்மான் கானை வைத்தும் இயக்கி வெற்றிக் கண்டார். விஜய்யின் வில்லு, ஜெயம் ரவியின் எங்கேயும் காதல், அக்‌ஷய் குமாரின் ரவுடி ரத்தோர், மீண்டும் சல்மான் கானை வைத்து தபங் 3 மற்றும் ராதே உள்ளிட்ட பல பாலிவுட் படங்களையும் இவர் இயக்கியுள்ளார். தபங் 4 படத்தையும் இயக்கி வருகிறார்.

கோட்: வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் கோட் படத்தில் பிரபுதேவா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பிரசாந்த், மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, ஜெயராம், அஜ்மல் என நட்சத்திரப் பட்டாளமே இருக்கும் படத்தில் பிரபுதேவாவும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஒரு பக்கம் ஹீரோவாகவும், இன்னொரு பக்கம் இயக்குநராகவும் படு பிசியாக உள்ளார் பிரபுதேவா.

மூதாட்டியுடன் போஸ்: இந்நிலையில், மலை பிரதேசத்தில் விடுமுறையை கழித்து வரும் பிரபுதேவா காட்டில் தனியாக விறகு வெட்டிக் கொண்டிருக்கும் மூதாட்டியுடன் எடுத்த க்யூட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த போட்டோவுக்கு ஏகப்பட்ட க்யூட்டான கமெண்ட்டுகளும் லைக்குகளும் குவிந்து வருகின்றன.

கைவசம் இத்தனை படங்களா?: கோட் படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், சன்னி லியோன், வேதிகாவுடன் பிரபுதேவா நடித்துள்ள பேட்ட ராப் திரைப்படம் உருவாகி வருகிறது. மேலும், அனுஷ்காவுடன் நடித்து வரும் காத்தனார், ஃபிளாஷ்பேக், முசாஸி, உல்ஃப் மற்றும் இந்தி படமான மஹாரக்னி என கைவசம் அரை டஜன் படங்கள் பிரபுதேவாவிடம் உள்ளன. நடிப்பு, இயக்கம், நடனம் என எப்போதும் போல இப்பவும் தூள் கிளப்பி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X