வாழ்க்கையில சின்ன சின்ன விஷயத்தகூட என்ஜாய் பண்றேன்... பிரபுதேவா சிலிர்ப்பு

மும்பை : கொரோனாவால் ஏற்படுத்தப்பட்டுள்ள லாக்டவுன் காரணமாக அனைவரும் தங்களது வீடுகளில் முடங்கியுள்ளனர்.

நடிகர், நடன இயக்குநர் மற்றும் இயக்குநர் என பல அவதாரங்களை எடுத்துவரும் பிரபுதேவாவும் தனது வீட்டில் முடங்கியுள்ளார்.

இவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த சல்மான்கானின் ராதே திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

லாக்டவுன் பாதிப்பு

லாக்டவுன் பாதிப்பு

கொரோனாவால் அனைவரும் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் அதன் காரணமாக ஏற்படுத்தப்பட்டுள்ள லாக்டவுன் இன்னும் அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. பரபரப்பான வாழ்க்கையை தொடர்ந்து அனுபவித்துவரும் நபர்களால் வீடுகளில் சும்மா இருப்பது என்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல.

சுவைமிகுந்த வாழ்க்கை

சுவைமிகுந்த வாழ்க்கை

ஆனால் அந்த அமைதியான வாழ்க்கையை அனுபவிக்க கற்றுக் கொண்டால் அதைவிட வாழ்க்கை சுவை மிகுந்ததாக இருக்காது என்பதை உணர்ந்து கொள்ளலாம். இதை உணர்ந்துக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார் நடிகர், நடன இயக்குர் மற்றும் இயக்குநர் அவதாரங்களை அடுத்தடுத்து எடுத்துவரும் பிரபுதேவா.

அமைதியாக என்ஜாய் செய்கிறேன்

அமைதியாக என்ஜாய் செய்கிறேன்

ஒரு வேலையை செய்பவர்களாலேயே வீட்டில் முடங்க முடியாதபோது, பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்துவந்த இவரால் எப்படி சும்மா வீட்டில் இருக்க முடியும் இதற்கு இவரே விளக்கம் அளிக்கிறார். ஒவ்வொரு எளிய விஷயத்தையும் அமைதியாக என்ஜாய் செய்வதாக கூறுகிறார்.

படங்களை பார்க்கும் பிரபுதேவா

படங்களை பார்க்கும் பிரபுதேவா

இந்த லாக்டவுனில் ஒவ்வொரு படத்தையும் பார்ப்பதாக தெரிவித்துள்ளார் பிரபுதேவா. ஓடிடியில் வெளியாகும் படங்கள் அனைத்தையும் உடனடியாக பார்த்து விடுவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த கடினமான நேரத்தில் வெளியில் சென்று நண்பர்களை சந்திக்க முடியாத நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு கிரிக்கெட் போட்டிகள் மக்களை கட்டிப் போட்டதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X