பிரபுதேவா நடிக்கும் 'சார்லி சாப்ளின் 2' - இரண்டு ஹீரோயின்கள் ஒப்பந்தம்!
Recommended Video

சென்னை : பிரபுதேவா நடிப்பில் 2002-ம் ஆண்டு வெளிவந்த படம் 'சார்லி சாப்ளின்'. பிரபு, அபிராமி, காயத்ரி ரகுராம், லிவிங்ஸ்டன் ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.
ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் வெளியான பல படங்கள் தோல்வியடைந்திருந்தாலும் 'சார்லி சாப்ளின்' படம் ஓரளவு வரவேற்பைப் பெற்றது.
'சார்லி சாப்ளின்' படத்தை வசூல் ரீதியில் மிகப்பெரிய வெற்றிப் படம் என்று சொல்ல முடியாவிட்டாலும் தமிழ் சினிமா ரசிகர்களால் ரசிக்கப்பட்டது.

தமிழில் பிரபுதேவா
தற்போது பிரபுதேவா தமிழ்ப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். இதன் காரணமாக, முன்பு அவரை வைத்து படம் இயக்கியவர்கள் பிரபுதேவாவை வைத்து படம் எடுக்க ஆர்வம் காட்டி அவரை அணுகி வருகிறார்கள்.

சார்லி சாப்ளின் 2
அவர்களில் ஷக்தி சிதம்பரத்துக்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார் பிரபுதேவா. ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்க 'சார்லி சாப்ளின் 2' படத்தின் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது அதன் இரண்டாம் பாகம் திட்டமிடப்பட்டு முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

ஹீரோயின் தன்யா
நிக்கி கல்ரானி இந்தப் படத்தில் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இந்நிலையில், 'கருப்பன்' படத்தின் ஹீரோயின் தன்யாவும் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பது உறுதியாகியிருக்கிறது.

ஜெயசித்ரா மகன் இசை
ஜெயசித்ராவின் மகனான அம்ரிஷ் இப்படத்துக்கு இசையமைக்கிறார். இப்படத்தை அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 9-ம் தேதி கோவாவில் தொடங்கவுள்ளது.


Click it and Unblock the Notifications











