Prabhudeva - வேலையை குறைத்து மகளுடன் நேரம் செலவழிக்க வேண்டும் - குஷியில் பிரபுதேவா

சென்னை: Prabhudeva (பிரபுதேவா) வேலையை குறைத்து இனி மகளுடன் நேரம் செலவிட வேண்டும் என நடன அமைப்பாளர் பிரபுதேவா தெரிவித்திருக்கிரார்.

இந்தியாவின் சிறந்த நடன அமைப்பாளர் பிரபுதேவாவின் கோரியோகிராஃபியயில் அனைத்து நடிகர்களுமே சிறப்பான நடனத்தை வெளிப்படுத்துவார்கள். ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு நடனம் அமைத்தார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய மீனா; இருப்பதிலேயே ரொம்பவும் கடினமான கோரியகிராஃபர் என்றால் அது பிரபுதேவாதான் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Prabhudeva Talks about his baby girl and his career

ஆக்டர் பிரபுதேவா: நடன அமைப்பாளராக மட்டுமின்றி பிரபுதேவா நடிகராகவும் புகழ் பெற்றவர். காதலன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான பிரபுதேவா தொடர்ந்து ராசைய்யா, விஐபி, மின்சாரக்கனவு, டைம் என ஏராளமான படங்கள் நடித்தார். அந்தப் படங்களும் ஹிட்டாகின. இதனால் 90களில் முன்னணி நடிகர்கள் வரிசையில் பிரபுதேவா இருந்தார். மேலும் காதல் கொண்டேன் படத்துக்கு ஹீரோவாக நடிக்க முதலில் செல்வராகவன் பிரபுதேவாவைத்தான் அணுகினார் என்பது நினைவுக்கூரத்தக்கது. பிரபுதேவா கடைசியாக பகீரா படத்தில் நடித்திருந்தார்.

இயக்குநர் பிரபுதேவா: நடிகர், நடன அமைப்பாளராக கலக்கிவந்த பிரபுதேவா 2005ஆம் ஆண்டு இயக்குநராகவும் அறிமுகமானார். அவர் தெலுங்கில் இயக்கிய முதல் படம்தான் தமிழில் சம்திங் சம்திங் படமாக ரீமேக்காகியது. அதனையடுத்து தமிழில் போக்கிரி, வில்லு, வெடி, எங்கேயும் காதல் உள்ளிட்ட படங்களை இயக்கிய அவர் ஹிந்தியில் வாண்டட் (போக்கிரி ரீமேக்), ரவுடி ரத்தோர், ராமையா வஸ்தாவையா, தபாங் 3 உள்ளிட்ட பல படங்களை இயக்கினார்.

டைவர்ஸ், பிரேக் அப்: பிரபுதேவாவை சுற்றி சர்ச்சைகளும் வட்டமடித்தன. தன்னுடன் நடனம் ஆடிய ரமலத் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு மூன்று மகன்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து அவரை விவாகரத்து செய்துவிட்டார். இதற்கிடையே நயனுடன் காதலில் இருந்த அவர் அதனையும் பிரேக் அப் செய்தார்.

இரண்டாவது திருமணம்: நயனுடனான பிரேக் அப்பிற்கு பிறகு சிங்கிளாக இருந்த பிரபுதேவா சில வருடங்களுக்கு முன்னதாக மருத்துவர் ஹிமானி சிங் என்பவரை ரகசியமாக திருமணம் செய்துகொண்டார். சமீபத்தில் திருப்பதிக்கு சென்றபோதுதான் ஹிமானி சிங்கின் புகைப்படம் வெளியானது. இவர்களுக்கு சில நாள்கள் முன்பு பெண் குழந்தை பிறந்தார். இந்தச் சூழலில் அதனை உறுதிப்படுத்திய பிரபுதேவா தன்னுடைய மனநிலை குறித்து பேசியிருக்கிறார்.

பிரபுதேவா பேட்டி: சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசிய அவர், "நான் தந்தை ஆகியிருக்கிறேன் என நீங்கள் கேள்விப்பட்டது உண்மைதான். நான் ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறேன். இப்போது முழுமை அடைந்ததாக உணர்கிறேன். வேலைப்பளுவை குறைத்து மகளுடன் நேரம் செலவிட விரும்புகிறேன். அதனால்தான் வேலை குறைத்துக்கொண்டிருக்கிறேன். எனது குடும்பம், மகளுடன் நேரத்தை செலவிட வேட்னும். வேலைக்காக அதிகம் ஓடியது போதும் என முடிவு செய்துவிட்டேன்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X