முதல்முறையாக பிரபுதேவாவுக்கு ஜோடியாகும் தமன்னா... விஜய் இயக்கத்தில்!

By Manjula

சென்னை: இயக்குநர் விஜய்யின் அடுத்த படத்தில் நடனப்புயல் பிரபுதேவா நாயகனாக நடிக்கவிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

தமிழில் நடன இயக்குநராக அறிமுகமாகி பின்னர் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என்று பல்வேறு அவதாரங்கள் எடுத்தவர் பிரபுதேவா.

சில வருடங்களாக கோலிவுட்டை விட்டு ஒதுங்கி பாலிவுட்டில் மையம் கொண்டிருக்கும் பிரபுதேவா மீண்டும் தமிழ் சினிமாவில் தலை காட்டவிருக்கிறார்.

Prabhudeva Team Up with A.L.Vijay

கடைசியாக தமிழில் இவர் நடிப்பில் வெளியான படம் எங்கள் அண்ணா அந்தப் படத்திற்குப் பின் பிரபுதேவா நடிப்பில் வேறு எந்தத் தமிழ்ப் படங்களும் வெளியாகவில்லை.

இந்நிலையில் 12 வருடங்களுக்குப்பின் மீண்டும் தமிழ் சினிமாவில் இவர் மீண்டும் நாயகனாக நடிக்கவிருக்கிறார். இவர் நடிக்கும் படத்தை மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள் படங்களை இயக்கிய விஜய் இயக்குகிறார்.

இந்த படத்தில் பிரபு தேவாவுக்கு ஜோடியாக தமன்னா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்க இருக்கிறது.

திகில் படமாக உருவாகும் இப்படத்தை பிரபுதேவாவே தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் இயக்கத்தில் கடைசியாக வெளியான இது என்ன மாயம் பாக்ஸ் ஆபிஸில் எடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X