வடிவேலு வாயில் விரலை விட்டு ஆட்டிய பிரபுதேவா.. தனுஷும் மகனும் என்ன பண்றாங்கனு பாருங்க.. ஆத்தி!

சென்னை: நடிகர், நடன இயக்குநர், இயக்குநர் என பன்முகத்தன்மை கொண்ட பிரபுதேவா முதன்முறையாக சென்னையில் கடந்த பிப்ரவரி 22ம் தேதி நடத்திய பிரம்மாண்ட நடன நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் வைப் செய்ய வைத்து வருகிறது. தனுஷ், எஸ்.ஜே. சூர்யா, வடிவேலு, பாக்கியராஜ், மீனா, அதிதி ஷங்கர், ரம்பா, சாக்‌ஷி அகர்வால், சாண்டி மாஸ்டர், தனுஷின் மகன்கள் என ஏகப்பட்ட பேர் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

பிரபுதேவாவுடன் இணைந்து ரவுடி பேபி பாடலுக்கு தனுஷ் போட்ட ஆட்டத்தையும் அதிதி ஷங்கர் போட்ட குத்தாட்டத்தையும் ரசிகர்களால் மறக்கவே முடியாது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக, சிறப்பு விருந்தினராக வந்த வடிவேலுவுடன் இணைந்து பிரபுதேவா செய்த வைப் தான் ஆல் டைம் ஹைலைட்.

Prabhudeva Vadivelu Dhanush

அதன் வீடியோ காட்சிகள் தற்போது சோஷியல் மீடியாவில் தீயாக பரவி வருகிறது. பிரபுதேவா வடிவேலுவின் தலைமுடியை பிடித்தும், வாயில் விரலை விட்டு ஆட்டியதையும் பார்த்து மனுஷன் கண்டிப்பா டென்ஷன் ஆகியிருப்பார் என்றே கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

வடிவேலு - பிரபுதேவா காம்போ: ஷங்கர் இயக்கத்தில் வெளியான காதலன் படத்தில் இருந்தே வடிவேலு - பிரபுதேவா காம்போ ரசிகர்களை பல படங்களில் சிரிக்க வைத்திருக்கிறது. மனதை திருடி விட்டாய் படத்தில் வரும் ஒய் பிளட் சேம் பிளட் காமெடி எல்லாம் என்றுமே தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்கமுடியாத ஒன்று. இந்நிலையில், பிரபுதேவா நடன நிகழ்ச்சிக்கு அழைத்ததும் ஓடோடி வந்துவிட்டார் நம்ம வைகைப்புயல் வடிவேலு.

வாயில் விரல் விட்டு ஆட்டிய பிரபுதேவா: பேட்ட ராப் பாடலுக்கு மேடையில் ஆட்டம் போட்ட பிரபுதேவா அப்படியே கீழே இறங்கி வந்து வடிவேலுவுடன் வைப் செய்ய ஆரம்பித்தார். இருவரும் மங்கி போல வாயை வைத்துக் கொண்டு டிசைன் டிசைனாக போஸ் கொடுத்து வந்த நிலையில், ஆடு வெட்டுவதற்கு தலையை ஆட்டிவிட்டது என நினைத்த பிரபுதேவா வடிவேலுவின் தலைமுடியை கலைத்து விட்டும், அவரது வாயிலேயே கை விட்டு ஆட்டியும் செய்ததை பார்த்து ஒட்டுமொத்த அரங்கமும் ரசிகர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தனுஷும் தனுஷ் மகன்களும்: வடிவேலுவின் வாயில் பிரபுதேவா விரல் விட்டு ஆட்டும் போது, வடிவேலு அருகிலே அமர்ந்துக் கொண்டு அதை பார்த்த தனுஷ் மற்றும் அவரது மகன்கள் விழுந்து விழுந்து சிரித்து வைப் செய்த காட்சிகளும் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. காதலன் படத்தில் இருந்த அதே வடிவேலுவா? இப்போதும் இருக்கிறார் என்றும் ஆனாலும், பிரபுதேவா செய்தது கொஞ்சம் ஓவர்தான் என்றும் ஏகப்பட்ட விமர்சனங்களும் கிளம்பியுள்ளன. பழைய நண்பர்கள் ஒன்று கூடினாலே இப்படித்தான் அட்ராசிட்டி செய்வார்கள், பார்க்க ரொம்ப நல்லா இருக்கு என ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர். இனிமேல் பிரபுதேவா எந்த நிகழ்ச்சிக்கு அழைத்தாலும் வடிவேலு வரவே மாட்டார் என்றும் கூறி வருகின்றனர்.

மீண்டும் இணைய வேண்டும்: சமீபத்தில் வடிவேலு மற்றும் பார்த்திபன் சந்தித்ததை பார்த்த ரசிகர்கள் அந்த காம்போவில் விரைவில் படம் வரப்போவதை எண்ணி சந்தோஷமடைந்தனர். இந்நிலையில், பிரபுதேவாவுடன் மீண்டும் வடிவேலு இணைந்து ஒரு படம் பண்ண வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர். வடிவேலு பழைய ஹிட் காம்போவுடன் எல்லாம் சேர்ந்து நடிப்பதையும் பழகுவதையும் பார்க்கவே நல்லா இருக்கு என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X