ஒரே கல்லுல ரெண்டு மாங்கா.. கோட் சூட்டிங் போன இடத்துல பிரபுதேவா பார்த்த வேலையை பாருங்க!

சென்னை: ”கோட்” படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகளை இலங்கையில் படமாக்கவே வெங்கட் பிரபு திட்டமிட்டு இருந்தார். ஆனால், கடைசி நேரத்தில் சூழல் அதற்கு செட்டாகாத நிலையில், கேரளாவுக்கு சூட்டிங்கை ஷிஃப்ட் செய்து விட்டனர். கேரளாவுக்கு ”கோட்” படத்தின் சூட்டிங்கிற்கு சென்ற சென்ற பிரபுதேவா இன்னொரு பட வாய்ப்பை அலேக்கா தட்டித் தூக்கியுள்ளார்.

உலகளவில் பிரபலமான நடனக் கலைஞர்களே பிரபுதேவாவின் நடனத் திறமையை பார்த்து மெய் சிலிர்த்து போய் விடுவார்கள். நடன இயக்குநராகவும் நடிகராகவும் இயக்குநராகவும் பன்முகத்தன்மை கொண்ட பிரபுதேவா வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் விஜய்யின் ஸ்குவாடில் நடித்து வருகிறார்.

Prabhudeva went to Kerala for GOAT shoot and gets Anushka s Kathanar movie offer


பிரபுதேவா மாஸ்டர்: இந்தியன் மைக்கேல் ஜாக்சன் என்றே ரசிகர்களால் கொண்டாடப்படும் பிரபுதேவா ஹீரோவாக ஒரு பக்கம் சில படங்களில் நடித்து வந்தாலும் துணை நடிகராக விஜய் படத்தில் இணைந்துள்ளார். போக்கிரி, வில்லு என விஜய்யை வைத்து 2 படங்களை பிரபுதேவா இயக்கினார். போக்கிரி மிகப்பெரிய ஹிட் அடித்தது. வில்லு பட சமயத்தில் நயன்தாராவுடன் காதல் ஏற்பட்ட நிலையில், அந்த படம் தலையும் புரியாமல் வாலும் புரியாமல் சொதப்பி விட்டது. அதன் பின்னர் பிரபுதேவாவுடன் இணைந்து பணியாற்றாமல் விஜய் தவிர்த்து வந்த நிலையில், வெங்கட் பிரபு கோட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபுதேவா மாஸ்டரை இறக்கி இருக்கிறார்.

Prabhudeva went to Kerala for GOAT shoot and gets Anushka s Kathanar movie offer


கேரளாவில் கோட்: இலங்கையில் நடைபெற வேண்டிய படப்பிடிப்பு சில சிக்கல் காரணமாக கடைசியாக கேரளாவில் தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் ரஷ்யாவிலும் சில சண்டைக் காட்சிகளை படமாக்க படக்குழு கிளம்பப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கேரளாவுக்குச் சென்ற பிரபுதேவா சோட்டானிக்கர பகவதி அம்மன் கோயிலுக்குச் சென்று வேண்டினார். யானையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை எல்லாம் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில், அவருக்கு சோட்டானிக்கர பகவதியம்மன் அருள் கிடைத்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

Prabhudeva went to Kerala for GOAT shoot and gets Anushka s Kathanar movie offer

ஒரே கல்லுல ரெண்டு மாங்கா: “காதலா காதலா” படத்தில் கமல்ஹாசனும் பிரபுதேவாவும் ஒரே கல்லுல ரெண்டு மாங்கா என சொல்லி காமெடி செய்வார்கள். தற்போது, அது நிஜமாகவே பிரபுதேவாவுக்கு நடந்திருக்கிறது. விஜய் படத்தின் சூட்டிங்கிற்காக கேரளா சென்ற அவருக்கு மலையாளத்தில் முதன் முதலாக அனுஷ்கா நடித்து வரும் காத்தனார் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்த படக்குழுவினர் பிரபுதேவாவை வரவேற்ற புகைப்படம் டிரெண்டாகி வருகிறது.
Prabhudeva went to Kerala for GOAT shoot and gets Anushka s Kathanar movie offer

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X