அப்படியே அப்பாவின் ஜெராக்ஸ் காப்பி.. பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா அறிமுகம்!
சென்னை: நடிகரும், டான்ஸ் மாஸ்டரும், இயக்குநருமான பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா முதன்முதலாக ஜிவி பிரகாஷ் இசையில் ஆல்பத்தில் அறிமுகமாகி உள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நடன இயக்குநர் சுந்தரம் மாஸ்டரின் மகனான பிரபுதேவா அக்னி நட்சத்திரம் படத்தில் க்ரூப் டான்ஸராக தனது பயணத்தை தொடங்கினார். அதன் பின் நடன இயக்குனரான பிரபு தேவா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் அவர் சிறந்த நடன அமைப்பாளராக வலம் வர ஆரம்பித்தார்கள். அந்த நேரத்தில் தான் காதலன் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகும் வாய்ப்பு வர அந்த படத்தில் முதன் முதலாக கதாநாயகனாக நடித்தார். முதல் படமே மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.
பிரபு தேவா: அந்த படத்தை தொடர்ந்து, காதலன், ராசய்யா, லவ் பேர்ட்ஸ், மிஸ்டர் ரோமியோ, மின்சார கனவு, விஐபி, ஏழையின் சிரிப்பில், பெண்ணின் மனதை தொட்டு, வானத்தை போல என அடுத்த படத்தில் ஹீரோவாக நடித்தார். இதையடுத்து இயக்குநர் அவதாரம் எடுத்த பிரபுதேவா போக்கிரி, வில்லி,வெடி, எங்கேயும் காதல் ஆனால், அவர் இயக்கி படங்களை அனைத்தும் வெற்றி பெறாததால், மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கினார்.

மகன் அறிமுகம்: பிரபுதேவா க்ரூப் டான்ஸராக இருந்த ரமலத் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தாலும், தங்களின் மகன்கள் விஷயத்தில் இனக்கமாக இருந்து வருகின்றனர். அண்மையில் நடந்த டான்ஸ் கான்சர்ட் நிகழ்ச்சியில் பிரபு தேவா தனது மகனுடன் 'பேட்ட ராப்' பாடலுக்கு ஆடி தனது மகனை அனைவருக்கும் அறிமுகப்படுத்தினார்.
ரிஷியின் நடன அசைவுகளைப் பார்த்த ரசிகர்கள், அப்பாவிற்கு தப்பாத பிள்ளை என புகழ்ந்தனர். தற்போது, ரிஷி ராகவேந்திரா தேவா இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பாடிய 'முதல் முதலை' இசை வீடியோ மூலம் அறிமுகமாகிறார். அந்த ஆல்பம் பாடலுக்கு அட்டகாசமான நடன அசைவுகளை வெளிப்படுத்தி உள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இதைப்பார்த்த பலர் அப்பாவின் ஜெராக்ஸ் என கருத்துங்களை பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











