மொட்டைத் தலை, வேற லெவல் கண்ணாடியில் நம்ம பிரபுதேவா... 'பஹிரா' சைக்கோ மிஸ்டரி த்ரில்லராம்ல...
சென்னை: பிரபுதேவா நடிக்கும் பஹிரா படம், சைக்கோ, மிஸ்டரி த்ரில்லர் என்று இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
த்ரிஷா இல்லேனா நயன்தாரா, அன்பானவன் அடங்காதவன் அசாராதவன் படங்களை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன்.
இவர் அடுத்து இயக்கும் படத்தில் பிரபுதேவா ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்துக்கு தற்காலிகமாக, 'காதலன் ரிட்டன்ஸ்' என்னும் டைட்டில் வைத்திருந்தனர்.
பர்ஸ்ட் லுக்
பரதன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக், காதலர் தினமான நேற்று வெளியிடப்பட்டது. பர்ஸ்ட் லுக் போஸ்டரை, நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதில், படத்துக்கு 'பஹிரா' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. போஸ்டரில் பிரபுதேவா, மொட்டை அடித்து, வித்தியாசமான கண்ணாடி அணிந்து புதுமையாக தோற்றத்தில் இருக்கிறார். இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரவேற்பை பெற்றுள்ளது.

பிரபுதேவா
இந்நிலையில், இந்தப் படம் பற்றி இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் பேசும்போது, ' இந்தப் படத்தின் கதையை எனது நண்பர் ஒளிப்பதிவாளர் அபிநந்தனிடம் சொன்னபோது அவர்தான், இந்தக் கதை பிரபுதேவாவுக்கு செட் ஆகும் என்று சொன்னார். இதையடுத்து, குலேபகாவலி படத்தில் பிரபுதேவா நடிப்பதற்கு முன்பு அவரிடம் இந்தக் கதையை சொன்னேன். பிடித்திருந்தது. பிறகு கால்ஷீட் கொடுத்தார்.

வேறுவிதமாக
இந்தப் படம், நிச்சயமாக அவரை வேறு கோணத்தில் காட்டும். இதுவரை பிரபுதேவாவை நடனத்தில் கலக்குபவராக, ரொமான்ஸ் பண்ணுபவராக, காமெடி பண்ணுபவராகப் பார்த்திருக்கிறோம். ஆனால் இந்தப் படம் வேறுவிதமாக அவரை காட்டும். அவர், பிரமாதமான நடிகர் என்பதை படப்பிடிப்பின்போது தெரிந்துகொண்டேன்.

ஆச்சரியமும் ட்விஸ்டும்
இது சைக்கோ மிஸ்டரி திரில்லர் படம். பல ஆச்சரியங்களும் ட்விஸ்டும் படத்தில் இருக்கும். இந்தப் படத்தின் கதை 'ஜங்கிள் புக்' பட கேரக்டரின் பாதிப்பில் உருவாக்கப்பட்டது. பிரபுதேவா கேரக்டர், ரசிகர்களுக்கு புதிதாக இருக்கும். 50 சதவிகித படத்தை சத்தம் போடாமல் முடித்துவிட்டோம். சென்னை, கொச்சி, மும்பையில் ஷூட்டிங் நடந்துள்ளது என்றார்.

அமைரா தஸ்துர்
இதில், நடிகர் பிரபுதேவா ஜோடியாக, இந்தி நடிகை அமைரா தஸ்துர் நடித்திருக்கிறார். இவர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த அனேகன் படத்தில் அவர் ஜோடியாக நடித்திருந்தார். பஹிரா படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு, இந்த மாத கடைசியில் தொடங்குகிறது. இலங்கை மற்றும் கோவாவில் படப்பிடிப்பு நடத்தப்பட இருக்கிறது. ஏப்ரல் மாதம் ஷூட்டிங் முடிவடைகிறது.


Click it and Unblock the Notifications











