அந்த முக்காலாவோட இப்ப எப்படிங்க போட்டிப்போட முடியும்? பிரபுதேவா வெட்கம்
Recommended Video
மும்பை: 90-களில் வெளியான முக்காலா முக்காப்புலா பாடலில் ஆடிய பிரபுதேவாவுடன் இப்போது போட்டியிட முடியாது என்கிறார் பிரபுதேவா.
சல்மான் கான், சோனாக்ஷி சின்ஹா நடித்து இந்தியில் ஹிட்டான படம், தபாங். 2010 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை அடுத்து, அடுத்த பாகம் உருவானது. 2012 ஆம் ஆண்டு வெளியான அந்த படமும் ஹிட். இப்போது 3 வது பாகம் உருவாகியுள்ளது.

சல்புல் பாண்டே
இதில் சல்மான் கான், சல்புல் பாண்டே கேரக்டரில் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்துள்ளார். சோனாக்ஷி சின்ஹா ஹீரோயின். ஏற்கனவே முதல் இரண்டு பாகங்களிலும் அவரே ஹீரோயினாக நடித்திருந்தார். பிரபுதேவா இயக்கியுள்ளார்.

ராதே
ஏற்கனவே வான்டட் படத்தில், சல்மான் கானை இயக்கியிருந்தார் பிரபுதேவா. அதுவரை சரிந்திருந்த சல்மானின் மார்க்கெட், வான்டட் படத்துக்கு பிறகு ஜிவ்வானது. தபாங் 3 வரும் 20 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதை அடுத்தும் சல்மானை இயக்குகிறார் பிரபுதேவா. ராதே என்று பெயரிடப்பட்டுள்ள இதன் ஷூட்டிங் இப்போது நடந்து வருகிறது.

3 வது முறை
மூன்றாவது முறையாக, சல்மான் கானை இயக்குவது பற்றி கேட்டதற்கு, 'சல்மான் என் மீது அதிக நம்பிக்கை வைத்திருகிறார். கற்பனை செய்ய முடியாத அளவுக்கான நம்பிக்கை அது. அதுபற்றி சொல்லத் தேவையில்லை. எல்லோருக்கும் தெரியும். அதை நான் உணர்கிறேன் என்கிறார் பிரபுதேவா.

வித்தியாசம்
அவர் மேலும் கூறும்போது, இரண்டு பேருக்குள்ளும் சிறந்த மரியாதை இருக்கிறது. முதலில் வான்டட் படத்தில் அவருடன் பணியாற்றியதற்கும், இப்போது பார்ப்பதற்கும் வித்தியாசத்தை பார்க்க முடிகிறது. அவருக்கு கதை, திரைக்கதை, வசனம் மட்டுமல்ல, சினிமாவில் எல்லாமும் தெரியும்.

அதுதான் காரணமா?
நடிப்பில் பெரிதாக அவர் வளர்ந்து நிற்கிறார் என்ற பிரபுதேவாவிடம், ஒரு படம் முடிந்ததுமே அதே இயக்குனரை தனது அடுத்தப் படத்துக்கும் சல்மான் பயன்பயடுத்தி யதில்லை. உங்களைப் பயன்படுத்துகிறார் என்றால், படங்களை விரைவாக முடிப்பது காரணமாக இருக்குமோ? என்ற கேள்விக்கு இருக்கலாம் என்றார் பிரபுதேவா.

முக்காலா...
'காதலன்' படத்தில் இடம்பெற்ற முக்காலா முக்காப்புலா பாடலின் மேஜிக்கை மீண்டும் எதிர்பார்க்கலாமா? என்றபோது, 90களில் பார்த்த பிரபுதேவாவுடன் நான் போட்டியிட முடியாது என்றார் பிரபுதேவா.


Click it and Unblock the Notifications











