சிங் இன் தி ரெயின்.. மீண்டும் பிரபுதேவாவுடன் இணைந்த வடிவேலு.. இது 28 வருட நட்பு!

சென்னை: பிரபுதேவா தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ அனைத்து சினிமா ரசிகர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

Recommended Video

சிங் இன் தி ரெயின்.. மீண்டும் பிரபுதேவாவுடன் இணைந்த வடிவேலு.. இது 28 வருட நட்பு!

வைகைப்புயல் வடிவேலு மற்றும் பிரபுதேவா இணைந்து இருக்கும் அந்த வீடியோவில் 'சிங் இன் தி ரெயின்' பாடலை வடிவேலு பாடி ரசிகர்களுக்கு பழைய 'மனதை திருடி விட்டாய்' படம் வெளியான காலத்திற்கே கூட்டிச் சென்றிருக்கிறார்.

அந்த வீடியோவை தான் பிரபுதேவா தற்போது ஷேர் செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார்.

மீண்டும் சினிமாவில்

மீண்டும் சினிமாவில்

ரஜினி, விஜயகாந்த், விஜய், அஜித், பிரபுதேவா என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை தனது நகைச்சுவை திறமையால் சிரிக்க வைத்து வந்த இம்சை அரசனை இனி நடிக்கவே கூடாது என அதிரடியாக சினிமா உலகம் சில பிரச்சனைகள் காரணமாக தடுத்து நிறுத்தியது. ஆனால், தற்போது அந்த தடைகளை சரி செய்து மீண்டும் சினிமாவில் மாஸாக என்ட்ரி கொடுக்க தொடர்ந்து நடித்து வருகிறார் வடிவேலு.

ஷிவானி உடன்

ஷிவானி உடன்

லைகா தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் ஷிவானி நாராயணன் உடன் இணைந்து நடித்து வருகிறார் வடிவேலு. இதுவரை இரண்டு ஷெட்யூல் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தைத் தொடர்ந்து ஏகப்பட்ட பெரிய படங்களிலும் கமிட் ஆகி வருகிறார் வடிவேலு.

மாமன்னன்

மாமன்னன்

உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் மாமன்னன் படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்து வருகிறார். பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களில் யோகி பாபு நடித்து வந்த நிலையில், இந்த படத்தில் அவர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபுதேவாவுடன் சந்திப்பு

பிரபுதேவாவுடன் சந்திப்பு

இந்நிலையில், நடிகர், நடன இயக்குநர், இயக்குநர் என பன்முகத் திறமை கொண்ட பிரபுதேவாவை சமீபத்தில் சந்தித்துள்ளார் வடிவேலு. இருவரும் இணைந்து அதகளம் செய்யும் ஒரு வீடியோவை ஷேர் செய்து நட்பு என கேப்ஷன் கொடுத்திருக்கிறார் பிரபுதேவா. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பழைய நினைவுகளில் மிதந்து வருகின்றனர்.

சிங் இன் தி ரெயின்

சிங் இன் தி ரெயின்

பிரபுதேவா வெளியிட்டுள்ள இந்த வீடியோவில் மனதை திருடிவிட்டாய் படத்தில் வடிவேலு பாடும் ‘சிங் இன் தி ரெயின்' பாடலை பாடி அப்படியே பாசத்தில் பிரபுதேவாவை கட்டித் தழுவும் வடிவேலுவை பார்ப்பதே ரசிகர்களுக்கு சரியான ட்ரீட்டாக அமைந்துள்ளது. மீண்டும் இருவரும் இணைந்து காமெடியில் கலக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

28 வருட நட்பு

28 வருட நட்பு

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் வெளியான காதலன் திரைப்படத்தில் தான் முதன் முதலில் வடிவேலு மற்றும் பிரபுதேவா கூட்டணி அமைந்திருக்கும். இவர்கள் இருவருக்கும் இடையே 28 வருட நட்பு என ரசிகர்கள் கமெண்ட் போட்டு பழைய நினைவுகளில் மிதந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X