பிரபுதேவா, ரெஜினா கெஸன்ட்ரா இணையும் புதிய படத்தின் டைட்டில் இதுவா?
சென்னை : நடிகர் பிரபுதேவா இப்பொழுது பல படங்களில் ஹீரோவாக பிஸியாக நடித்து வருகிறார்
முதல் முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்த பொன்மாணிக்கவேல் திரைப்படம் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு இப்பொழுது நேரடியாக ஓடிடியில் வெளியாகி உள்ளது
இந்த நிலையில் பிரபுதேவா, ரெஜினா கெஸன்ட்ரா இணைந்து நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் இன்று மாலை அறிவிக்கப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

போலீஸ் அதிகாரியாக மிரட்டிய
நடனம்,நடிப்பு, இயக்கம் என பல திறமைகளை கொண்டுள்ள பிரபுதேவா தமிழ் சினிமாவில் பிஸியான நடிகராக வலம் வந்து கொண்டுள்ளார். பல எதார்த்தமான கதைகளில் நடித்து வந்த இவர் முதல் முறையாக போலீஸ் அதிகாரியாக மிரட்டிய படம் பொன் மாணிக்கவேல். நீண்ட காலமாக திரையரங்கில் வெளியாக காத்துக் கொண்டிருந்த இந்த திரைப்படம் ஒரு வழியாக நேரடியாக ஒடிடியில் வெளியிடப்பட்டது. நல்லா விமர்சனங்களை பெற்று வரும் பொன்மாணிக்கவேல் திரைப்படத்தில் நடிகை நிவேதா பெத்துராஜ் கதாநாயகியாக நடித்துள்ளார்.

வித்தியாசமான பல கெட்டப்புகளில்
இந்த நிலையில் திரிஷா இல்லனா நயன்தாரா , அன்பானவன் அசராதவன் அடங்காதவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா பஹீரா என்ற படத்தில் சைக்கோ கொலைகாரனாக நடித்துள்ளார். அழகான பெண்களை காதலித்து அவர்களை கொலை செய்யும் கொடூர சைக்கோவாக பிரபுதேவா இதில் நடித்திருக்கிறார். வித்தியாசமான பல கெட்டப்புகளில் தோன்றுகிறார். குறிப்பாக பெண் வேடத்தில் இவர் நடித்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிக அளவில் உள்ளது. சுமார் 8 நடிகைகள் இதில் நடித்துள்ளனர்.

இயக்குனர் டான் சாண்டி இயக்கத்தில்
சமீபத்தில் ஹரிகுமார் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் தேள் படத்தின் அறிவிப்பு வெளியானதை அடுத்து இப்பொழுது மற்றுமொரு புதிய படத்தின் அறிவிப்பு வெளியாக உள்ளது. அதன்படி மகாபலிபுரம், கொரில்லா உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் டான் சாண்டி இயக்கத்தில் பிரபுதேவா, ரெஜினா கெஸன்ட்ரா இணைந்து நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் அனுசுயா, இளவரசு, உமா ரியாஸ், ஆர்யன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக ரமேஷ் பி.பிள்ளை தயாரித்திருக்கிறார். இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்

புதிய படத்தின் டைட்டில்
கடந்த சில மாதங்களாக சென்னை மற்றும் கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது காதல் கதை களமாக உருவாகியுள்ள இப்படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று வெளியாக உள்ளது. அதன்படி பிரபுதேவா ரெஜினா கெஸன்ட்ரா இணையும் புதிய படத்தின் டைட்டில் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இப்படத்திற்கு "பிளாஷ்பேக்" என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது எனவும் தகவல்கள் கசிந்துள்ளது.


Click it and Unblock the Notifications











