twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிரசாந்திற்கு பதில் பிரபுதேவா, அஜித்திற்கு பதில் பிரசாந்த்...தொடரும் ஷங்கர் படங்களின் காஸ்டிங் மாற்றங்கள்

    |

    சென்னை: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிக்க பல நடிகர்கள் விருப்பப்படுவார்கள். ஆனால் அவர் படத்தில் நடிக்க சில நடிகர்கள் சில காரணங்களால் தவிர்த்து வந்ததும் நடந்துள்ளது.

    அதே போல தன் படத்தில் நடித்த நடிகர்களுடன் மீண்டும் இன்னொரு படத்தில் பணிபுரிந்ததும் அவருடைய சினிமா கேரியரில் அடிக்கடி நடந்துள்ளது.

    அவ்வாறு அவர் படத்தில் முதலில் நடிக்காமல், பின்னர் நடித்த நடிகர்கள் பற்றியும் இதுவரை நடிக்காதவர்கள் பற்றியும் இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

    நான் ஹீரோவானால் இவர்தான் என்னை இயக்க வேண்டும்... இயக்குநர் ஷங்கர் சொன்ன நபர் யார் தெரியுமா?நான் ஹீரோவானால் இவர்தான் என்னை இயக்க வேண்டும்... இயக்குநர் ஷங்கர் சொன்ன நபர் யார் தெரியுமா?

    ஜெண்டில்மேன்

    ஜெண்டில்மேன்

    சூரியன் படத்தில் இணை இயக்குநராக பணிபுரிந்த போது ஏற்பட்ட பழக்கத்தின் அடிப்படையில் தன் முதல் படமான ஜென்டில்மேன் கதையை சரத்குமாரிடம் சொல்லி இருக்கிறார் ஷங்கர். அதே போல கமல் ஹாசனிடமும் அந்தக் கதை சொல்லப்பட்டது. ஆனால் சில காரணங்களால் இருவரும் அதில் நடிக்காமல் நடிகர் அர்ஜுன் நடித்து வெற்றி பெற்றது.

    காதலன் - ஜீன்ஸ்

    காதலன் - ஜீன்ஸ்

    காதலன் கதையையும் முதலில் நடிகர் பிரஷாந்திற்குதான் கூறியுள்ளார் ஷங்கர். சம்பளப் பிரச்சனை காரணமாக அவர் நடிக்கவில்லை. பிரபு தேவா நடித்து சுப்பர் ஹிட் ஆனது. அது பிரபு தேவாவிற்கே எழுதிய கதை போன்று அமைந்தது. ஜீன்ஸ் படமும் முதலில் அஜித் மற்றும் அப்பாஸிற்கு சொல்லப்பட்ட கதை. ஆனால் இருவருக்கும் பதில் பிரஷாந்த் நடித்து வெற்றியடைந்தது.

    இந்தியன் – முதல்வன் - ஐ

    இந்தியன் – முதல்வன் - ஐ

    இந்தியன் ஒன் லைன் மற்றும் முதல்வன் கதையை நடிகர் ரஜினிகாந்திடம் தான் முதலில் கூறியிருக்கிறார். ஆனால் இந்தியன் கதை முழுவதும் தயார் ஆனபோது அது கமலுக்கென்றே உருவாக்கப்பட்ட கதை போல வந்ததால் அதில் கமலை நடிக்க வைத்தார். முதல்வன் படம் ரஜினிக்கென்றே எழுதப்பட்ட கதை போல இருந்தாலும், அந்தக் காலத்தில் இருந்த அரசியல் சூழ்நிலையால் ரஜினி நடிக்க மறுத்துவிட்டார். 'ஐ' படத்தின் ஒன் லைனும் ரஜினிக்கு சொல்லப்பட்டதுதான். இதனை ரஜினியே எந்திரன் புரமோஷனில் சொல்லி இருப்பார். ஆனால் அதில் விக்ரம் நடித்திருந்தார்.

    எந்திரன் - நண்பன்

    எந்திரன் - நண்பன்

    எந்திரன் திரைப்படம் நடிகர் கமல் ஹாசனை வைத்து துவங்கப்பட்டு பின்னர் கைவிடப்பட்டது. அதில் ரஜினிகாந்த் நடித்து சூப்பர் ஹிட்டும் ஆனது. நண்பன் படத்தில் நடிக்க சூர்யா, மாதவன் மற்றும் சிம்புவிடம் பேச்சு வார்த்தை நடைபெற்றது. ஆனால் விஜய், ஜீவா மற்றும் ஶ்ரீகாந்த் நடித்து படம் வெளிவந்தது. இவ்வாறு அவருடைய ஒவ்வொரு படங்களிலும் கதாநாயகர்கள் மாறியுள்ளனர். அதே வேளையில் அர்ஜுன், கமல், ரஜினிகாந்த், விக்ரம் மற்றும் பிரபுதேவா அவருடைய இயக்கத்தில் இரண்டு முறை நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிக்க பல நடிகர்கள் விருப்பப்படுவார்கள். ஆனால் அவர் படத்தில் நடிக்க சில நடிகர்கள் சில காரணங்களால் தவிர்த்து வந்ததும் நடந்துள்ளது. அதே போல தன் படத்தில் நடித்த நடிகர்களுடன் மீண்டும் இன்னொரு படத்தில் பணிபுரிந்ததும் அவருடைய சினிமா கேரியரில் அடிக்கடி நடந்துள்ளது. அவ்வாறு அவர் படத்தில் முதலில் நடிக்காமல், பின்னர் நடித்த நடிகர்கள் பற்றியும் இதுவரை நடிக்காதவர்கள் பற்றியும் இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X