பிரபுதேவா வித்தியாசமான காதல் கதையில் நடிக்கும் பிளாஷ்பேக் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!
சென்னை: நடிகர் பிரபுதேவா முழுநேர நடிகராக மாறி பல படங்களில் பட்டையை கிளப்பிக் கொண்டு உள்ளார்.
பாலிவுட்டிலும் மிகப் பிரபலமாக உள்ள இவர் சமீபத்தில் சல்மான் கானின் ராதே படத்தை இயக்கியிருந்தார்
இந்த நிலையில் டான் சாண்டி என்பவரின் இயக்கத்தில் பிரபுதேவா வித்தியாசமான காதல் கதையில் நடித்துள்ள திரைப்படத்திற்கு பிளாஷ்பேக் என டைட்டில் வைக்கப்பட்டு அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது

முதல் முறையாக போலீஸ் வேடத்தில்
நடிகர் பிரபுதேவாவின் நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு திரைப்படங்களும் வித்தியாசமாகவும் ரசிகர்களுக்கு புது அனுபவத்தை கொடுக்கின்ற வகையிலும் உள்ளது அந்த வகையில் பிரபுதேவா முதல் முறையாக போலீஸ் வேடத்தில் நடித்திருந்த பொன்மாணிக்கவேல் சில சூழ்நிலை காரணமாக திரையரங்குகளில் வெளியிட முடியாமல் நேரடியாக ஓடிடியில் வெளியிடப்பட்டது.

சைக்கோ கொலைகாரனாக
இந்த படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்திருந்தார். கமர்ஷியல் படமாக வெளியான பொன்மானிக்கவேல் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த நிலையில் அடுத்ததாக திரிஷா இல்லனா நயன்தாரா பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பஹீரா என்ற படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தில் மொத்தம் 8 கதாநாயகிகள் நடிக்க இதில் பிரபுதேவா சைக்கோ கொலைகாரனாக நடித்துள்ளார். அனைத்து கட்ட பணிகளும் முடிந்து பஹீரா மிக விரைவிலேயே ரிலீசாக உள்ளது.

மென்மையான காதல் கதை
இவ்வாறு புது புது இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றுவதை வழக்கமாகக் கொண்ட பிரபுதேவா இப்பொழுது மகாபலிபுரம், கொரில்லா உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் டான் சாண்டி இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். மென்மையான காதல் கதை களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடிகை ரெஜினா கெஸன்ட்ரா நடித்துள்ளார்.

பிளாஷ்பேக் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக ரமேஷ் பி.பிள்ளை படத்தை தயாரித்துள்ளார். சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.
அனுஸுயா, இளவரசு, உமா ரியாஸ், ஆர்யன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சென்னை மற்றும் கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மென்மையான காதலை களமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு பிளாஷ்பேக் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிளாஷ்பேக் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அருண் விஜய் மற்றும் ஜிவி பிரகாஷ் பிளாஷ்பேக் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டனர். போஸ்டரை பார்க்கும்போதே ஆட்டோகிராஃப் போலாம ஒரு நல்ல காதல் கதை போல தெரிகிறது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications