பிரபுதேவாவின் "மை டியர் பூதம்" டிரைலர் அப்டேட் வெளியானது!
சென்னை: நடன இயக்குனராக அனைவரது மனங்களிலும் இடம்பிடித்த பிரபுதேவா இப்பொழுது நடிகராகவும் அனைவருக்கும் பிடித்தவராகவும் உள்ளார்.
தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து மிகச்சிறந்த நடிகர் என்பதையும் நிரூபித்து வரும் பிரபுதேவா மை டியர் பூதம் என்ற திரைப்படத்தில் வித்தியாசமான ஃபேண்டசி ரோலில் முதல்முறையாக நடித்து வருகிறார்.
மாயாஜாலக் கதை களத்தில் உருவாகிவரும் மை டியர் பூதம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த வாரம் வெளியாகி வைரலான நிலையில் இப்பொழுது டிரைலர் ரிலீஸ் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

மை டியர் பூதம்
நடன இயக்குனராக இருந்து பின்பு இயக்குனர் அவதாரம் எடுத்து பல வெற்றி படங்களை கொடுத்த பிரபுதேவா இப்பொழுது நடிகராக பட்டையைக் கிளப்பிக் கொண்டு உள்ளார். அந்த வகையில் ஹீரோவாக நடித்த திரைப்படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி பெற தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இப்போது இயக்குனர் என் ராகவன் கூட்டணியில் புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதற்கு மை டியர் பூதம் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

ரமேஷ் பி பிள்ளை தயாரிப்பில்
மஞ்சப்பை, கடம்பன் ஆகிய படங்களை இயக்கிய ஏன் ராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் மை டியர் பூதம் திரைப்படம் முழுக்க முழுக்க ஃபேண்டஸி கதைகளில் உருவாகி வருகிறது. பிரபுதேவாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.
அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் ரமேஷ் பி பிள்ளை தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு டி இமான் இசை அமைக்கிறார். எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

வித்தியாசமான ஹேர் ஸ்டைலில்
ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசம் காட்டி நடித்து வரும் பிரபுதேவா இந்த படத்தில் முற்றிலும் வித்தியாசமான ரோலில் நடித்துள்ளார். வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் பார்த்த உடனேயே அனைவரையும் கவரும் குறிப்பாக குழந்தைகளை கவரும் பிரபுதேவாவின் மை டியர் பூதம் திரைப்படம் அனைத்து பணிகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. மிக விரைவிலேயே ரிலீசாக உள்ள இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த முக்கிய அப்டேட் தற்பொழுது வெளியாகி உள்ளது.

டிசம்பர் 24ஆம் தேதி டிரைலர் ரிலீஸ்
அதன்படி டிசம்பர் 24ஆம் தேதி மை டியர் பூதம் டிரைலர் ரிலீஸ் ஆகிறது என்ற அதிகாரப்பூர்வ அப்டேட்டை படக்குழு அறிவித்துள்ளது. ஃபேண்டஸி கதை களத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கக்கூடிய காமெடி கலந்த ஃபேண்டசி கதைக்களத்தில் உருவாகி வரும் மை டியர் பூதம் பிரபுதேவாவின் திரைவாழ்க்கையில் மற்றுமொரு மைல்கல்லாக இருக்கும் என நம்பப்படுகிறது.


Click it and Unblock the Notifications











