பிரபு தேவாவின் "பொய்க்கால் குதிரை" முக்கிய அப்டேட்டை வெளியிடும் படக்குழு!

சென்னை: நடனத்தில் பல பரிமாணங்களை காட்டி ரசிகர்களை மகிழ்வித்த நடிகர் பிரபுதேவா இப்பொழுது நடிகராகவும் பல பரிமாணங்களை எடுத்து வருகிறார்

இமேஜை பற்றி கவலை படாமல் வில்லன் கதாபாத்திரங்களிலும் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்

இந்த நிலையில் செயற்கை கால் பொருத்திய மாற்றுத்திறனாளியாக பிரபுதேவா நடித்துவரும் பொய்க்கால் குதிரை படத்தில் இருந்து முக்கிய அப்டேட்டை படக்குழு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 14ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது

திருப்புமுனையை ஏற்படுத்திய

திருப்புமுனையை ஏற்படுத்திய

நடிகர் பிரபுதேவாவின் நடனத்திற்கு மயங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது இந்திய அளவில் மிகச் சிறந்த நடன இயக்குனராக உள்ள பிரபுதேவா அதுமட்டுமல்லாமல் இயக்கத்திலும் வல்லவராக உள்ளார். பல படங்களை இயக்கிய அதில் வெற்றியும் கண்டுள்ளார். அந்த வகையில் விஜய்யின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய போக்கிரி திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். போக்கிரி ,வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் ஆதரவை பெற்று இன்று வரை தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸில் சக்கை போடு போட்ட டாப் திரைப்படங்களில் உள்ளது.

வசூல் மன்னனாக

வசூல் மன்னனாக

போக்கிரி வெற்றியை தொடர்ந்து வில்லு,எங்கேயும் காதல், வெடி உள்ளிட்ட பல படங்களை இயக்கி வந்த பிரபுதேவாவுக்கு தமிழ் சினிமா இயக்கத்தில் பெரிதளவு கை கொடுக்கவில்லை என்பதால் மீண்டும் இந்தி படங்களை இயக்க சென்று விட்டார். அந்த வகையில் இந்தியில் ஆல் டைம் வசூல் மன்னனாக இருந்து வரும் சல்மான் கான் நடிப்பில் அடுத்தடுத்து படங்களை இயக்கி வந்தார். அந்த வகையில் பிரபுதேவா சல்மான்கான் கூட்டணியில் வெளியான ராதே வெளியாகி பல விமர்சனங்களை கண்டது

பொய்க்கால் குதிரை

பொய்க்கால் குதிரை

இந்த நிலையில் இயக்கத்திற்கும் ஒட்டு மொத்தமாக முழுக்குப் போட்டுவிட்டு இப்பொழுது நடிப்பில் மட்டும் முழுமூச்சுடன் கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக தமிழில் பல திரைப் படங்களில் ஹீரோவாக கலக்கி வருகிறார். அந்தவகையில் ஹரஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து, இரண்டாம் குத்து எனபல சர்ச்சை படங்களை இயக்கிய சர்ச்சைக்குரிய இயக்குனர் சந்தோஷ் பி ஜெயகுமார் இயக்கத்தில் பிரபுதேவா செயற்கை கால் பொருத்திய மாற்றுத்திறனாளியாக நடித்துள்ள திரைப்படம் பொய்க்கால் குதிரை.

இரண்டு கதாநாயகிகள்

இரண்டு கதாநாயகிகள்

அப்பா, மகள் பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தை மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வருகிறது. மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார் மற்றும் ரைசா வில்சன் என இரண்டு கதாநாயகிகள் நடித்து வருகின்றனர். டி இமான் இசையமைத்து வருகிறார்

ஜனவரி 14 காலை 11 மணிக்கு

ஜனவரி 14 காலை 11 மணிக்கு

ஆக்ஷன் கலந்த திரில்லர் கதை களத்தில் உருவாகி வரும் பொய்க்கால் குதிரை படத்தில் இருந்து முன்னோட்ட வீடியோவை படக்குழு ஜனவரி 14ஆம் தேதி காலை 11 மணிக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிடுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X