பிரபுதேவாவின் தேள் படத்தின் டிரைலரை வெளியிடும் ஜிவி பிரகாஷ்!
சென்னை: நடன இயக்குனர், இயக்குனர்,நடிகர் என பல பரிமாணங்களைக் கொண்டவர் பிரபுதேவா இப்பொழுது தமிழில் முழு வீச்சில் படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்
Recommended Video
முதல்முறையாக போலீஸ் வேடத்தில் பிரபு தேவா நடித்துள்ள பொன்மாணிக்கவேல் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியிடப்படுகிறது
இந்நிலையில் பிரபல இயக்குனரும் நடிகருமான ஹரிகுமார் இயக்கத்தில் பிரபுதேவா நடித்த தேள் படத்தின் டிரைலரை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் ட்விட்டர் பக்கத்தில் நவம்பர் 18ஆம் தேதி வெளியிடுகிறார்.

பாலிவுட்டிலும் முன்னணி இயக்குனராக
பிரம்மிக்க வைக்கும் நடனத்தின் மூலம் இந்திய அளவில் புகழ்பெற்ற நடன இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் பிரபுதேவா தமிழில் பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். தமிழில் போக்கிரி, வில்லு ,வெடி ,எங்கேயும் காதல் உள்ளிட்ட படங்களை இயக்கி இயக்குனராகவும் உள்ளார். பாலிவுட்டில் சல்மான் கான் நடிப்பில் வெளியான வான்டட், தபாங் 3 மற்றும் சமீபத்தில் வெளியான ராதே உள்ளிட்ட படங்களை இயக்கி பாலிவுட்டிலும் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டுள்ளார்

வித்தியாசமான கதைகளில் நடிப்பதில் ஆர்வம்
இவ்வாறு பல திறமைகளை கையில் வைத்திருக்கும் பிரபுதேவா தமிழில் முழுவீச்சில் படங்களில் ஹீரோவாக கலக்கி கொண்டுள்ளார். பிரபுதேவா நடிப்பில் வெளியான தேவி திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் பிரபல இயக்குனரும் நடிகருமான ஹரிக்குமார் இயக்கத்தில் இப்பொழுது தேள் படத்தில் நடித்துள்ளார்.

தேள்
ஸ்டுடியோ கிரீன் கே ஈ ஞானவேல்ராஜா தயாரித்துள்ள இந்த படத்திற்கு சத்யா சி இசையமைத்துள்ளார். விறுவிறுப்பாக தொடங்கப்பட்ட இந்த படம் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அதன்பிறகு கொரோனா சூழல் காரணமாக படப்பிடிப்பு சரிவர நடத்த முடியாமலும் திரையரங்குகள் தொடர்ந்து மூடப்பட்டு இருந்தாலும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடர்ந்து தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது.

டிரைலரை ஜிவி பிரகாஷ் குமார் வெளியிடுகிறார்
இந்த நிலையில் சமீபகாலமாக இதன் படப்பிடிப்பு விறு விறு வேகத்தில் நடத்தி முடிக்கப்பட்டு இப்பொழுது ரிலீசுக்கு தயாராக உள்ளது. இதில் பிரபுதேவா உடலை தாறுமாறாக ஏற்றி செம ஃபிட்டாக உள்ளார். சமீபத்தில் இப்படத்தில் ஆடியோ லான்ட்ச் சென்னையில் நடைபெற்றது அதில் பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் தேள் படத்தின் டிரைலர் குறித்த முக்கிய அப்டேட் தற்போது கிடைத்துள்ளது. நவம்பர் 18ஆம் தேதி அதாவது நாளை மாலை 5 மணிக்கு தேள் படத்தின் டிரைலரை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடுகிறார்.


Click it and Unblock the Notifications











