கமல், ரஜினி அண்ணன்களுடைய பண்பு அஜித்திடம்தான் இருக்கிறது... பிரபு பாராட்டு

சென்னை: 1980 மற்றும் 90-களில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் நடிகர் பிரபு.

பின்னர் குணச்சித்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கி, தொடர்ச்சியாக பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் நடிகர் அஜித் பற்றி முன்னதாக பிரபு கொடுத்துள்ள பேட்டி தற்சமயம் வைரலாகியுள்ளது.

சிறப்பு குதிரை

சிறப்பு குதிரை

சமீபத்தில் வெளியே வந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பிரபு. அவருடன் சேர்ந்து அவருடைய மகன் விக்ரம் பிரபுவும் நடித்திருந்தார். அக்னி நட்சத்திரம், அஞ்சலி, ராவணன் திரைப்படங்களை தொடர்ந்து நான்காவது முறையாக இயக்குநர் மணிரத்தினம் இயக்கத்தில் பிரபு நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. குதிரை சவாரியில் மற்ற நடிகர்களை விட அதிக அனுபவம் மிக்கவர் பிரபு என்பதால் இந்தப் படத்தில் அவருக்காக சிறப்பான குதிரை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாம்.

கமல் ரஜினி பிரபு

கமல் ரஜினி பிரபு

கிட்டத்தட்ட அவருடன் சம காலத்தில் நடித்த அனைத்து நடிகர்களுடனும் சேர்ந்து நடித்த நடிகர் என்றால் பிரபு என்று சொல்லலாம். கமல் ஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த், சத்யராஜ், கார்த்திக் என்று அனைத்து நடிகர்களுடனும் சேர்ந்து நடித்துள்ளார். கமல் ஹாசனுடன் முதன் முதலில் அவர் சேர்ந்து நடித்த வெற்றி விழா படத்தில் வானம் என்ன பாடலில் இருவரும் சிறப்பாக நடனமாடி இருப்பார்கள். பிரபுவும் நன்கு நடனமாடக் கூடிய கதாநாயகன். சுந்தரம் மாஸ்டர் கோரியோகிராஃப் செய்த அந்தப் பாடலில் பிரபு தேவா கமல்ஹாசன் அவர்களுக்கும் ராஜூ சுந்தரம் பிரபு அவர்களுக்கும் சொல்லிக் கொடுத்தார்களாம். அதேபோல ரஜினியுடன் இணைந்து குரு சிஷ்யன் படத்தில் முதன் முதலில் நடித்திருந்தார்.

வசூல் ராஜா சந்திரமுகி

வசூல் ராஜா சந்திரமுகி

பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் கமலுடன் வசூல்ராஜா திரைப்படத்தில் நடித்த பிரபுவிற்கு தன்னுடைய சந்திரமுகி திரைப்படத்தை தயாரிக்கும் பொறுப்பை கொடுத்திருந்தார் ரஜினிகாந்த். அந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்தை திட்டி வெளிய அனுப்ப வேண்டிய காட்சியில் முதலில் நடிக்க மறுத்தாராம் பிரபு. பின்னர் மேம்போக்காக திட்டி அனுப்புவது போலத்தான் அந்தக் காட்சியை படம் பிடித்திருப்பார்கள்.

அஜித் பிரபு

அஜித் பிரபு

பல நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ள பிரபு, நடிகர் அஜித்துடன் சேர்ந்து பில்லா திரைப்படத்திலும் நடித்திருப்பார். அந்தப் படத்தில் ஏற்பட்ட நட்பின் காரணமாக பிரபு தயாரிப்பில் அசல் என்கிற திரைப்படத்தில் நடித்துக் கொடுத்தார் அஜித். பிரபு சிவாஜி கணேசனின் மகன் என்பதால் அவர் நடிக்க வந்த புதிதிலிருந்து இன்று வரை அனைவரும் அவரிடம் மரியாதையுடன் பழகுவார்களாம். குறிப்பாக நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் தன்னை எப்போது பார்த்தாலும் எழுந்து வரவேற்பார்கள் என்றும் சூட்டிங் முடிந்து வீடு செல்லும் பொழுது கார் வரை வந்து கார் கதவு மூடும் வரை உடன் இருந்து வழி அனுப்புவார்கள் என்றும் அவர்கள் இருவருக்கும் பிறகு அந்தப் பண்பை நடிகர் அஜித்திடம்தான் பார்த்திருக்கிறேன் என்று அஜித்தை மனமாற பாராட்டி இருக்கிறார் பிரபு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X