மகத்துடனான காதலை முறித்துக் கொண்ட பிராச்சி: இன்ஸ்டாகிராமில் குமுறல்

By Siva

Recommended Video

மஹத்துடன் பிரேக்கப் செய்த காதலி வெளியிட்ட வைரல் வீடியோ

சென்னை: மகத்துடனான காதல் முறிந்துவிட்டதாக அவரின் காதலி பிராச்சி மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் 2 வீட்டில் இருக்கும் மகத் துபாயில் வசிக்கும் தொழில் அதிபரான பிராச்சி மிஸ்ராவை 8 மாதங்களாக காதலித்து வந்தார். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்கு வந்த இடத்தில் அவருக்கு யாஷிகா மீது காதல் ஏற்பட்டுள்ளது.

உன்னை காதலிக்கிறேன் என்று யாஷிகாவிடமே கூறிவிட்டார் மகத்.

நம்பிக்கை

நம்பிக்கை

யாஷிகாவுடன் லூட்டி அடித்ததை பார்த்த பிறகும் மகத் மீது நம்பிக்கை வைத்திருந்த பிராச்சி நேற்றைய நிகழ்ச்சியை பார்த்து மனமுடைந்தார். மகத் யாஷிகாவிடம் தன் காதலை சொன்னதை பார்த்த பிராச்சி முக்கிய முடிவு எடுத்துள்ளார். தான் எடுத்துள்ள முடிவு குறித்து வீடியோவுடன் சமூக வலைதளத்தில் விளக்கம் அளித்துள்ளார் பிராச்சி.

பிராச்சி

பிராச்சி

பிக் பாஸ் வீட்டிற்கு கிளம்பிய அன்று மகத் பேசிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் பிராச்சி. பிராச்சியை பிரிந்து 3 மாதம் எப்படித் தான் இருக்கப் போகிறேனோ என்று காதல் பொங்க பேசியுள்ளார் மகத். மகத் பேசியதை எல்லாம் கேட்டு பிராச்சி பெருமிதம் கொண்டுள்ளார். அந்த வீடியோவில் இருந்த மகத் தற்போது இல்லை, மாறிவிட்டார் என்கிறார் பிராச்சி.

முறிவு

முறிவு

நான் காதலித்த ஒருவரை பிக் பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைத்தேன். பிக் பாஸ் டைமிங்கிற்கு ஏற்ப எங்கள் வாழ்க்கையை திட்டமிட்டோம். அவர் என்னை காதலித்தார். நான் அவரை இன்னும் காதலிக்கிறேன். நான் இனியும் அவர் காதலி கிடையாது. ஆனால் அவரை நேரில் சந்தித்து அனைத்து விஷயங்கள் குறித்தும் பேசுவேன். அவர் யாஷிகாவை காதலிப்பது தற்போது தெரிந்துவிட்டது என்கிறார் பிராச்சி.

யாஷிகா

நான் வேதனையில் உள்ளேன். ஆனால் இதனால் என் வாழ்க்கை மாறிவிடாது. என்னை பார்த்துக் கொள்ள தெரியும். மகத் மும்தாஜிடம் கேவலமாக நடந்து கொண்டிருக்கிறார். அவரின் ஒரேயொரு நலம் விரும்பியான ஜனனியையும் அவர் ஆதரிக்கவில்லை. அவரை பற்றி இனி என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். உங்களின் மெசேஜ்களுக்கு நன்றி, இது என் தனிப்பட்ட வாழ்க்கை, நான் பார்த்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் பிராச்சி.

மும்தாஜ்

மும்தாஜ்

மகத் மும்தாஜை கேவலமாக பேசுவதும் நடத்துவதும் பார்வையாளர்களுக்கு பிடிக்கவில்லை. மகத் மும்தாஜிடம் மோசமாக நடந்து கொள்வதை பிராச்சியும் கவனித்து சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். அனைவருக்கும் தெரிவது ஆண்டவருக்கு மட்டும் ஏன் தெரிய மாட்டேன் என்கிறது. அவர் கண்டித்தால் மகத் இப்படி கீழ்த்தரமாக நடப்பாரா?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X