காதலியை கரம் பிடித்தார் பிரதீப் ஆண்டனி.. நேரில் சென்று வாழ்த்திய பிரபலம்!
சென்னை: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான நடிகர் பிரதீப் ஆண்டனி தனது காதலியை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி டிரெண்டாகி வருகிறது. பலரும் இந்த தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதீப் ஆண்டனியை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்து இருக்க மாட்டார்கள். இன்றைய சீசன் 8 நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்காததற்கு காரணம் இவர் சொல்லும் அளவிற்கு இணையத்தில் ஏராளமான ரசிகர்களை வைத்து இருக்கிறார்.

நடிகர் பிரதீப் ஆண்டனி: அருவி, வாழ் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ள பிரதீப் ஆண்டனி பிக் பாஸ் 7ல் கலந்து கொண்டார்.பிக் பாஸ் வீட்டில் சிறப்பாக விளையாடி வந்த இவர் மீது வீட்டில் இருந்த பெண்கள் இவரின் கேரக்டர் சரியில்லை என்று கூறி உரிமைக்குரல் எழுப்பியதை அடுத்து, பிரதீப் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். இதனால், ஆத்திரம் அடைந்த பிரதீப்பின் ஆதரவாளர்கள் கமலஹாசன் ஒரு தலைபட்சமாக செயல்பட்டதாக கூறி இணையத்தில் கமலுக்கு எதிராக கண்டனங்கள் எழுந்தன.
ஆதரவாளர்கள்: வழக்கமாக பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களைத்தான் இணையவாசிகள் ட்ரோல் செய்வார்கள். ஆனால், 7வது சீசனில் கமல்ஹாசன் ட்ரோல் மெட்டீரியலாக மாறினார். அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் 8வது சீசனில் பிரதீப் ஆண்டனி கலந்து கொள்வதாக தகவல் வெளியானதும், கடந்த சீசனில் அவரை வெளியே அனுப்பியதற்கு இது பிராயத்சித்தமாக இருக்கும் என்று சொல்லப்பட்டது. ஆனால் அந்த தகவலில் உண்மை இல்லை.

காதல் திருமணம்: இந்நிலையில் பிரதீப் ஆண்டனிக்கும், அவரின் காதலி பூஜா சக்திக்கும் கடந்த ஜூன் மாதம் 16ந் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் இன்று கிறிஸ்துவ முறைப்படி எளிமையாக திருமணம் நடந்துள்ளது. இவர்கள் இருவரும் கடந்த நான்கு வருடமாக காதலித்து வருகின்றனர். மாப்பிள்ளை பிரதீப் ஆண்டனியுடன் பிக் பாஸ் சுரேஷ் தாத்தா இருக்கும் புகைப்படம் தற்போதைக்கு வெளியாகியுள்ளது. போட்டோக்கள் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, ரசிகர்கள், நண்பர்கள், சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் பிரதீப் ஆண்டனிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
எல்லாமே பிளானா: இந்த திருமணத்தில் சுவாரசியமான என்னவென்றால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 10ந் தேதி அதாவது நவம்பம் மாதம் முதல் வாரத்தில் தான் பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். தற்போது அதே வாரத்தில் அதுவும் கமலஹாசனின் பிறந்தநாளில் பிரதீப் தனது காதலியை கரம் பிடித்துள்ளார். இது எதேர்ச்சையாக நடந்ததா இல்லை பிளானா என்று தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











