Pradeep Antony: அடிச்சான் பாருடா அப்பாயின்மென்ட் ஆர்டர்.. பிக் பாஸ் பிரதீப் காட்டுல பண மழை தான்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பிரதீப் ஆண்டனியால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என வீட்டில் உள்ள பெண்கள் பலர் செங்கொடி தூக்கிய நிலையில், கமல்ஹாசன் அதிரடியாக பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலேவுக்கு கூட பிரதீப் ஆண்டனியை சேர்க்கவே இல்லை.
பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்ததை வைத்து அந்த சீசன் முழுவதும் கேம் ஆடி முடித்து விட்டனர். பிரதீப்புக்கு எதிராக குரல் கொடுத்த புல்லி கேங் போட்டியாளர்கள் வரிசையாக பிக் பாஸ் வீட்டில் அடுத்தடுத்த வாரங்களில் வெளியேற்றப்பட்டனர்.

பிரதீப் ஆண்டனி: அருவி படத்தில் நடித்த பிரதீப் ஆண்டனி சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான வாழ் படத்திலும் கவின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான டாடா படத்திலும் நடித்துள்ளார். உதவி இயக்குநரான பிரதீப் ஆண்டனி படம் இயக்கப் போவதாக தெரிவித்து வந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். ஏற்கனவே 3வது சீசனில் கவின் விளையாடிய போது அவரை உள்ளே வந்து பார்த்த நண்பரும் இந்த பிரதீப் ஆண்டனி தான்.
முதல் ரெட் கார்டு: கடந்த சீசனில் அசீமுக்கு எதிராக ஏகப்பட்ட முறை போட்டியாளர்கள் எதிர்ப்பு குரல் கொடுத்த நிலையிலும் கமல்ஹாசன் ரெட் கார்டு கொடுக்கவே இல்லை. கடைசியாக அவருக்குத்தான் டைட்டிலே கொடுத்து வழியனுப்பினர். ஆனால், இந்த சீசனில் ரெட் கார்டை வைத்தே கேமை கொண்டு போக நினைத்தார்களோ என்னவோ பிரதீப் ஆண்டனி ஆரம்பத்தில் இருந்தே வெறித்தனமாக விளையாட வைத்து பின்னர் அவரை அதிரடியாக வெளியே அனுப்பி வேறலெவல் கேம் பிளானை இந்த சீசனில் நடத்தினர். பிக் பாஸ் தமிழில் முதல் முறையாக ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பெண்களுக்கு எதிரானவர் பிரதீப் ஆண்டனி என அவரை ஒரு உமனைசர் ரேஞ்சுக்கு முத்திரை குத்தி வெளியே அனுப்பினர்.
கடும் எதிர்ப்பு: கவின் முதல் பிக் பாஸ் முன்னாள் போட்டியாளர்கள் பலரும் பெண்களின் பொய் குற்றச்சாட்டை நம்பி கமல்ஹாசன் தேவையில்லாமல் தப்பான தீர்ப்பை கொடுத்து விட்டார் என நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லு ரேஞ்சுக்கு அவர் மீது கடும் நெருக்கடிகளும் விமர்சனங்களும் எழுந்தன. மாயா கேங் செய்த செயல் தான் பிரதீப் வெளியேற காரணம் என நினைத்த ரசிகர்கள் இறுதியில் மாயாவை ஜெயிக்க விடாமல் பிரதீப்புக்கு ஆதரவு குரல் கொடுத்த அர்ச்சனாவை ஜெயிக்க வைத்து விட்டனர்.
9 லட்சம் அட்வான்ஸ்: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கேவலமான பட்டத்துடன் பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்ட நிலையில், வெளியே அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் குறிப்பாக ரசிகைகளின் ஆதரவு கிடைத்தது. இந்நிலையில், புதிதாக படம் ஏதும் இயக்காமல் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளேன் என்றும் அதன் அட்வான்ஸாக 9 லட்சம் கொடுத்துள்ளனர் என செக் ஒன்றை பதிவிட்டு அந்த படம் எப்போ வரும் என்றெல்லாம் தெரியாது. வந்தால் தியேட்டருக்கு சென்று பாருங்கள் என கேப்ஷன் கொடுத்திருக்கிறார் பிரதீப் ஆண்டனி.


Click it and Unblock the Notifications











