கடமையை செஞ்சிட்டேன்.. எங்களை செய்யாம இருங்க.. வாக்களித்த பின் பிரதீப் ஆண்டனி அதிரடி ட்வீட்
சென்னை: மக்களவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. அதனையொட்டி மக்கள் வாக்களிப்பதற்கு ஆர்வத்துடன் வாக்குச்சாவடிக்கு சென்றுவருகின்றனர். இந்தச் சூழலில் நடிகரும், பிக்பாஸ் பிரபலமுமான பிரதீப் ஆண்டனி தான் படித்த பள்ளிக்கு சென்று தனது வாக்கை செலுத்தினார். பிறகு ட்விட்டரில் அவர் போட்டிருக்கும் ட்வீட் ஒன்று படு ட்ரெண்டாகியுள்ளது.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. இன்று முதல் தொடங்கி ஜூன் மாதம் ஒன்றாம் தேதிவரை மக்களவைத் தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதனையொட்டி அரசியல் கட்சிகள் தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டுவந்தன. இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. பாஜக தலைமையில் பாமக, சமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.

முதற்கட்ட தேர்தல்: முதற்கட்ட மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் மொத்தம் 102 தொகுதிகளில் இன்று நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் தேர்தல் களம் கடந்த சில வாரங்களாகவே பரப்புரைகளால் சூடு பிடித்திருந்தது. இந்தத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தக் கூட்டணி வெல்லும் என்ற எதிர்பார்ப்பு உச்சக்கட்டமாக நிலவிவருகிறது.
பலத்த பாதுகாப்பு: இந்த மக்களவைத் தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடப்பதற்காக 4,627 பறக்கு படைகள், 5,208 புள்ளிவிவர கண்காணிப்பு குழு, 2000க்கும் மேற்பட்ட வீடியோ கண்காணிப்பு குழு, 1.255 வீடியோ பார்வையாளர் குழு தேர்தல் பணியில் இறங்கியிருக்கின்றன. தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் இன்று ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது.
தொடங்கிய வாக்குப்பதிவு: இந்நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வாக்குப்பதிவு இன்று தமிழ்நாடு முழுவதும் காலை 7 மணி முதல் தொடங்கியது. தமிழ்நாட்டில் மொத்தம் ஆறு கோடியே 18 லட்சத்து 90 ஆயிரத்து 348 வாக்காளர்கள் இருக்கின்றனர். இவர்களில் ஆண் வாக்காளர்கள் மூன்று கோடியே மூன்று லட்சத்து 96 ஆயிரத்து 330 பேரும், பெண் வாக்காளர்கள் மூன்று கோடியே 14 லட்சத்து 85 ஆயிரத்து 724 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 8,294 பேரும் இருக்கிறார்கள். காலை 11 மணி நேர நிலவரப்படி 24.37 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
பிரதீப் ஆண்டனி ட்வீட்: அஜித், ரஜினி, கமல், விஜய் சேதுபதி, தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பிரபலங்கள் தங்களது வாக்கை செலுத்தினர். அந்தவகையில் நடிகரும், பிக்பாஸ் பிரபலமுமான பிரதீப் ஆண்டனி தனது வாக்கை செலுத்தினார். பிறகு வாக்களித்த மையத்துக்கு முன்பு புகைப்படம் எடுத்துக்கொண்ட அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "என் கடமையை நான் செய்துவிட்டேன். உங்க கடமையா எங்களை செய்யாம இருங்க என்று குறிப்பிட்டிருக்கிறார். அவரது இந்த ட்வீட் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











