நாலு ஃபாரீன் படத்தை திருடி படம் பண்ணப் போறேன்.. பிரதீப் ஆண்டனி போட்ட தக் லைஃப் ட்வீட்!
சென்னை: நீங்களாச்சு.. பிக் பாஸ் ஆச்சு என பிரதீப் ஆண்டனி தனக்கு சப்போர்ட் பண்ணி சோஷியல் மீடியாவில் தொடர்ந்து நெகட்டிவ் கருத்துக்களை பதிவிட்டு வரும் ரசிகர்களுக்கும் பதிலடி கொடுத்துள்ளார்.
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பிரதீப் ஆண்டனி பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத வகையில் செயல்பட்டதாக மாயா, பூர்ணிமா ரவி, ஐஷு, ரவீனா தாஹா, அக்ஷயா உள்ளிட்ட பெண் போட்டியாளர்கள் சர்ச்சையை கிளப்பிய நிலையில், கமல்ஹாசன் ரெட் கார்டு கொடுக்க சொல்லி பிரதீப் ஆண்டனியை வெளியே அனுப்பி விட்டார்.

பிரதீப் ஆண்டனிக்காக கமல் வெளியிடும் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுகளில் கூட தொடர்ந்து பிரதீப் ஆண்டனி ரசிகர்கள் ஜஸ்டிஸ் ஃபார் பிரதீப் என கேட்டு வருகின்றனர்.
கவலையே இல்லை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் தன்னை உமனைசர் என சொல்லி வெளியே அனுப்பியது பற்றியெல்லாம் பிரதீப் ஆண்டனி பெரிதாக பொருட்படுத்தவே இல்லை. தனக்கு சினிமா இயக்கும் வாய்ப்புகள் பிக் பாஸ் ஃபிளாட்ஃபார்ம் மூலமாக கிடைத்ததை எண்ணி சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறார். தனது ரசிகர்களையும் தொடர்ந்து சில் பண்ணுங்க ஃபேன்ஸ் என பிரதீப் ஆண்டனி சொல்லி வந்தாலும், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் அந்த பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என ரசிகர்கள் தொடர்ந்து பிரதீப்புக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.
4 படத்தை திருடி படம் பண்ண போறேன்: இந்நிலையில், தொடர்ந்து கமல்ஹாசனுக்கு எதிராக பிரதீப் ஆண்டனி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை பார்த்த பிரதீப் ஆண்டனி சோஷியல் மீடியாவிலும் பிக் பாஸ் என அடித்துக் கொண்டிருப்பதை பார்த்து கடுப்பாகி விட்டார். "சரி ஜாலியா இருந்துச்சு.. இப்போ 4-5 புரொட்யூசர்ஸ் என்னை நம்பி கதை கேட்கிறாங்க.. நான் IFFI GOA 2024 கிளம்புறேன். நாலு ஃபாரீன் படத்தை பார்த்து, திருடி.. ஒரு நல்ல ஸ்க்ரிப்ட்டோட வரேன்.. ஆள விடுங்க.. நீங்களாச்சு.. பிக் பாஸ் ஆச்சு போயிட்டு வரேன்.. ஆள விடுங்க" என தக் லைஃப் ட்வீட் ஒன்றை போட்டுள்ளார் பிரதீப் ஆண்டனி.
சந்தடி சாக்கில் தமிழ் சினிமா இயக்குநர்கள் எல்லாம் ஹாலிவுட் படங்களை திருடி தான் கதை பண்றாங்க என்றும் போட்டு உடைத்திருக்கிறார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். முதலில் ஒரு படத்தை உருப்படியா பண்ணுங்க, அப்புறம் பேசலாம் பிரதீப் என்றும் கமல் ரசிகர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











