Bigg Boss Pradeep - ரெட் கார்டுடன் பிரதீப் கொண்டாட்டம்.. ட்ரெண்டாகும் புகைப்படங்கள்
சென்னை: Bigg Boss 7 Pradeep (பிக்பாஸ் 7 பிரதீப்) பிக்பாஸிலிருந்து ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட பிரதீப் தன் குடும்பத்தினருடன் கொண்டாடினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தொடங்கி கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நடந்துவருகிறது. இந்த சீசனின் போட்டியாளர்கள் ரொம்பவே பிரபலமானவர்களாக இல்லை. இருந்தாலும் போட்டியாளர்களில் பிரதீப்பின் செயல்கள் வரவேற்பையும், விமர்சனத்தையும் கொடுத்தன. அதிலும் அவர் தன்னுடைய ஒவ்வொரு மூவையும் டைட்டில் வின்னர் ஆக வேண்டும் என்பதை நோக்கியே நகர்த்தினார்.

ஸ்ட்ரேட்டஜி: நான் இப்படித்தான் இருப்பேன் இதற்காகத்தான் விளையாடுகிறேன் என்று ஓபனாக பேசிவிட்டே விளையாட செய்தார். சூழல் இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்பு நடந்த டாஸ்க் ஒன்றில் கூல் சுரேஷ் தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி அவரிடம் கோபமாக பல வார்த்தைகளை பேசினார். அது மிகப்பெரிய சர்ச்சை ஆனது. ஆனால் அவரோ தான் இப்படித்தான் பேசுவேன் என்பதில் தீர்க்கமாக இருந்தார்.
அடுக்கிய குற்றச்சாட்டு: அதனையடுத்து கமல் ஹாசனிடம் ஜோவிகா, மாயா, பூர்ணிமா, சரவண விக்ரம், கூல் சுரேஷ், விஷ்ணு உள்ளிட்டோர் உரிமை குரல் எழுப்பி பிரதீப் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். முக்கியமாக அவர் வீட்டில் இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; கெட்ட வார்த்தை பேசுகிறார்; கதவை திறந்து வைத்துக்கொண்டு கழிவறை செல்கிறார் போன்ற பல குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டன.

ரெட் கார்டு: இதனைத் தொடர்ந்து அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது கடும் விமர்சனத்தை சந்தித்துவருகிறது. அவருக்கு ஆதரவாக பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட ஆரம்பித்திருக்கின்றனர். ஒருசிலரோ பிரதீப் மீது அபாண்டமாக பழிப்போட்டிருக்கிறார்கள். இந்த சீசனில் அவர் இருந்தால் கண்டிப்பாக வென்றுவிடுவார் என்பதால்தான் ஹவுஸ்மேட்ஸ்கள் அவரை டார்கெட் செய்து காலி செய்துவிட்டார்கள் என்றும் பேச ஆரம்பித்திருக்கின்றனர்.
கொண்டாட்டம்: இந்நிலையில் பிரதீப் ஆண்டனி தனக்கு கொடுக்கப்பட்ட ரெட் கார்டுடன் தன் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள், தோழிகளுடன் கொண்டாடும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் தன் மனதில் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லை தன்னுடைய நேர்மையை அவர் உணர்ந்ததால்தான் இப்படிப்பட்ட கொண்டாட்டத்தை பிரதீப்பால் நிகழ்த்த முடிகிறது என ரசிகர்கள் அந்த புகைப்படத்துக்கு கீழே கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











