Leo: வெறும் 10 செகண்ட் தான் வரேன்.. லியோ படத்தில் இணைந்த கிரிக்கெட் பிரபலம்.. இப்படி சொல்லிட்டாரே!

சென்னை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழில் கிரிக்கெட் கமென்ட்ரி கொடுத்து வந்த பிரதீப் முத்து லியோ படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதுகுறித்து அவரே போட்டுள்ள ட்வீட் ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.

ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் எக்கச்சக்க நடிகர்கள் இணைந்து நடித்த நிலையில், கடைசியில் என் காட்சியையே கட் செஞ்சிட்டாங்க என சாந்தனு உள்ளிட்ட நடிகர்கள் ரொம்பவே ஃபீல் செய்தனர்.

 Pradeep Muthu reveals about his timing in Leo Movie

வாரிசு படத்தில் நடித்த குஷ்புவின் காட்சியையும் அப்படியே தூக்கி அடித்து விட்டனர். இந்நிலையில், லியோ படத்திலும் ஏகப்பட்ட நடிகர்கள் இணைந்து வரும் நிலையில், ஃபைனல் காப்பியில் யாரெல்லாம் இருப்பார்கள், யாரெல்லாம் வாம்மா மின்னல் என்கிற ரேஞ்சில் வந்து செல்வார்கள் என்பதே தெரியவில்லை.

லியோவில் எகிறும் ஆன்போர்ட் லிஸ்ட்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், கவுதம் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலி கான், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் நிலையில், பிரதீப் முத்துவும் லேட்டஸ்ட் இணைப்பாக இணைந்துள்ளார் என்கிற தகவல் வெளியானது.

உடனடியாக லியோ படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார் என்பதை அறிந்ததும் விஜய் ரசிகர்கள் அவரிடமே அப்டேட் கேட்க ஆரம்பித்து விட்டனர்.

10 செகண்ட் தான்: விஜய் ரசிகர்களின் அன்பு தொல்லையில் இருந்து தப்பிக்க முடிவெடுத்த பிரதீப் முத்து அய்யோ ஆளவிடுங்கப்பா சாமி நான் வெறும் 10 செகண்ட் தான் லியோ படத்தில் நடிக்கிறேன் என ட்வீட் போட்டுள்ளார்.

மெட்ராஸ் சென்ட்ரல் யூடியூப் சேனலில் பணியாற்றி வந்த பிரதீப் முத்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழில் கிரிக்கெட் வர்னணையாளராக இணைந்து பணியாற்றி வருகிறார். ஏற்கனவே ஹிப் ஹாப் ஆதி ஹீரோவாக அறிமுகமான மீசையை முறுக்கு படத்திலேயே கிட்டத்தட்ட நெகட்டிவ் ரோலில் நடித்திருப்பார் பிரதீப் முத்து.

 Pradeep Muthu reveals about his timing in Leo Movie

இந்நிலையில், விஜய்யின் லியோ படத்தில் சின்ன ரோல் கிடைத்துள்ளதும் தனக்கு சந்தோஷம் தான் என பதிவிட்டுள்ளார். முன்னதாக மெர்சல் படத்தில் மெட்ராஸ் சென்ட்ரல், பரிதாபங்கள் யூடியூப் சேனல்களில் நடித்துள்ள கோபி, சுதாகர் ஒரு சின்ன சீனில் வந்து செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X