டிராகன் படம் டான் 2 தான்.. மொட்டை மாடி பார்ட்டியில் ஒத்துக்கொண்ட பிரதீப் ரங்கநாதன்.. பாவம் அஸ்வத்!
சென்னை: அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன், மிஷ்கின், கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள டிராகன் திரைப்படம் ஏஜிஎஸ் தயாரிப்பில் இந்த வாரம் திரைக்கு வருகிறது. இந்த படத்தில் யூடியூப் பிரபலங்களான விஜே சித்து மற்றும் அஸ்ரத் கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து காமெடியில் கலக்கியுள்ளனர்.
இந்நிலையில், விஜே சித்துவின் மொட்டை மாடி பார்ட்டிக்கு லுங்கி அணிந்துக் கொண்டு வந்த இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவை சுத்துப் போட்டு விஜே சித்துவும் அஸ்ரத்தும் வைத்து செய்த வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த படம் டான் 2 தான் என படத்தின் நாயகன் டி. ராகவன் எனும் டிராகன் பிரதீப் ரங்கநாதன் உண்மையை அப்படியே உளற அஸ்வத் மாரிமுத்து கடைசி வரை என்ன சொல்வதென்றே தெரியாமல் சமாளித்தது ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்தியுள்ளது.
இத்தனை படங்களின் காப்பியா?: டிராகன் என்ன மாதிரியான படம் என கேள்வியை எழுப்பிய விஜே சித்து, இது டான் 2வா, வாரணம் ஆயிரமா, குஷியா இல்லை மீசையை முறுக்கு படமா என கேள்வி எழுப்பி இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவை சிபி சக்கரவர்த்தி என்றே பெயரை மாற்றிக் கொள்ளும் அளவுக்கு பங்கம் பண்ணிவிட்டனர். முன்னதாக ஜெயம் ரவியை பெயர் குறித்து கேள்வி எழுப்ப அவர் ரவி மோகன் என்றே பெயரை மாற்றிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
டிராகன் டான் 2 தான்: ரசிகர்களுக்கு தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்க வேண்டும் என்பதற்காக எல்லா அடியையும் வாங்கிக் கொண்டு இருக்கிறேன் என அஸ்வத் மாரிமுத்து சமாளிக்க, அதனால் தான் இந்த படம் டான் 2 என சொல்வதை அவர் மறைத்து விட்டார் என படத்தின் நாயகன் பிரதீப் ரங்கநாதன் ஓபனாகவே போட்டு உடைத்துவிட்டார். அஸ்வத் மாரிமுத்து எங்கே சுத்திக் கொண்டு வந்தாலும், இந்த படம் டான் 2 தான் என்பதை ஆணித்தரமாக சொல்லி டைரக்டரை டோட்டல் டேமேஜ் செய்துவிட்டார். இந்த வாரம் வெள்ளிக்கிழமை படம் வரட்டும் நாங்க சொல்றோம் இது டான் 2வா அல்லது எந்த படத்தோட காப்பி என ரசிகர்கள் கலாய்க்க ஆரம்பித்துள்ளனர்.
புக்கிங் ஓபன்: லவ் டுடே படத்திற்கு பிறகு பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் படம் வரும் 21ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அந்த படத்திற்கான டிக்கெட் புக்கிங் இன்று முதல் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு இதுவரை வெளியான படங்களிலேயே மதகஜ ராஜா மற்றும் குடும்பஸ்தன் தான் பாக்ஸ் ஆபீஸ் வெற்றிப் படங்கள் என்கிற நிலையில், டிராகன் படம் அந்த ரெக்கார்டை முறியடிக்குமா என்கிற கேள்விகள் கிளம்பியுள்ளன.


Click it and Unblock the Notifications











