3 நிமிஷம்னு சொன்ன நடிகைக்கு மூச்ச முட்ட லிப் லாக் கொடுத்த பிரதீப் ரங்கநாதன்.. லவ் டுடே போல தடுக்கல!

சென்னை: பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே படத்தில் இடம்பெற்ற "சாச்சிட்டாளே" பாடலில் பிரதீப் ரங்கநாதன் லிப் கிஸ் அடிக்க வரும்போதெல்லாம் இவானா வாயில் கை வைத்து தடுத்துக் கொண்டே இருப்பது ரசிகர்களை ரொம்பவே கவர்ந்தது. அந்த படமும் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறி தற்போது பாலிவுட்டிலும் ரீமேக் ஆகியுள்ளது.

காதலர் தினத்துக்கு வரவேண்டிய காதலிக்க நேரமில்லை, நேசிப்பாயா உள்ளிட்ட படங்கள் பொங்கலுக்கு ஆசைப்பட்டு வெளியாகி தியேட்டர்களில் படம் பார்க்க ஆளில்லாமல் காத்து வாங்கி வரும் நிலையில், காதலர் தினமான பிப்ரவரி 14ம் தேதி தனது அடுத்த படமான டிராகன் படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துவிட்டார் பிரதீப் ரங்கநாதன்.

pradeep ranganathan dragon kayadu lohar

சண்டைக்காரி ரித்திகா சிங்கை நூடுல்ஸ் மண்டையாக ரசிக்க வைத்த அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் உருவாகியுள்ள டிராகன் படத்தின் பாடல் காட்சியில் கயாடு லோஹருக்கு பிரதீப் ரங்கநாதன் லிப் கிஸ் அடிக்கும் காட்சி தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

விக்னேஷ் சிவன் - நயன்தாரா: லேடி சூப்பர் ஸ்டாரை திருமணம் செய்துக் கொண்டு வெளிநாடுகளுக்கு விக்னேஷ் சிவன் டூர் அடித்து எப்படியெல்லாம் வாழ்க்கையை மஜாவாக கொண்டாடி வருகிறாரோ அதே போன்ற ஒரு ட்ரீம் சாங்கை அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதனையும் மலையாள நடிகை கயாடு லோஹரையும் வைத்து உருவாக்கியுள்ளார். அந்த பாடலை இவரை தவிர வேறு யாரும் எழுத முடியாது என விக்னேஷ் சிவனையே எழுத வைத்து கொஞ்ச நாள் காணாமல் போயிருந்த சித் ஸ்ரீராமை பாடவைத்து "வழித்துணையே" பாடலை இமிடியேட் சார்ட் பஸ்டராக மாற்றியுள்ளனர்.

pradeep ranganathan dragon kayadu lohar

கயாடு லோஹருக்கு லிப் கிஸ்: மலையாள நடிகையான கயாடு லோஹர் மார்பை அறுத்து பத்தொன்பதாம் நூற்றாண்டு படத்தில் நடித்ததை பார்த்து அதிர்ந்து போன ரசிகர்கள் இந்த படத்தில் அவரை ஏஞ்சல் போல ஃபாரீன் லொகேஷனில் பார்த்து மெய் மறந்து போயுள்ளனர். காதலர்களின் தேசமான பாரீஸ் நகரத்தில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான ஈஃபிள் டவரை பார்க்கும் போது இவரும் கொடுக்கும் லிப் கிஸ் காட்சி பாடலில் இடம்பெற்று இளைஞர்களின் பக்கெட் லிஸ்ட் காட்சியாகவே அதை மாற்றும் அளவுக்கு செம ரொமாண்டிக்காக உருவாக்கப்பட்டு இருக்கிறது.

மூச்சு முட்ட: முன்னதாக வெளியான இந்த பாடல் குறித்த ப்ரோமோவில் இந்த ட்ரீம் சாங் 3 நிமிஷம் தான் என கயாடு லோஹர் பிரதீப் ரங்கநாதனை கலாய்த்த நிலையில், அதற்குள் என்ன பண்ண முடியுமோ பண்றேன் என மனுஷன் சம்பவம் செய்திருக்கிறார். அடுத்த மாதம் காதலர் தினத்துக்கு லவ் டுடே படத்தை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதனுக்கு இன்னொரு பாக்ஸ் ஆபிஸ் படம் பார்சல் என்றே சொல்லலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X