LIC டைட்டில் சிக்கல்.. பிரதீப் ரங்கநாதன் பிறந்தநாளில் வெளியான புதிய டைட்டில்.. அட இதுதானா?

சென்னை: இயக்குநராக தமிழ் சினிமாவில் 'கோமாளி' படத்தின் மூலம் அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், 'லவ் டுடே' படத்தில் ஹீரோவாகவும் இயக்குநராகவும் கடுமையாக உழைத்து அந்த படத்தையும் வெற்றிப்படமாக மாற்றி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனக்கான ஒரு இடத்தை பிடித்து விட்டார். அவரது 31வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

பிரதீப் ரங்கநாதனின் பிறந்தநாளை முன்னிட்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள படத்தின் டைட்டிலை அதிகாரப்பூர்வமாக தனது சோஷியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.

LIK Pradeep Ranganathan Nayanthara

சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் பிரதீப் ரங்கநாதனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். பிரதீப் ரங்கநாதனின் சினிமா வாழ்க்கை பற்றியும் அவரது புதிய படத்தின் தலைப்பு பற்றியும் விரிவாக பார்ப்போம் வாங்க..

பிரதீப் ரங்கநாதன் பிறந்தநாள்: 1993ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி சென்னையில் பிறந்த பிரதீப் ரங்கநாதன் இன்று தனது 31வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். கோமாளி படத்தில் ஆட்டோ டிரைவராக நடித்த போதே ரசிகர்களை கவர்ந்த பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கிறார் என்றதும் ஏகப்பட்ட ட்ரோல்கள் குவிந்தன.

சந்தித்த அவமானங்கள்: ஆரம்ப காலத்தில் எம்ஜிஆருக்கே சினிமாவில் நடிக்கும் முகம் இல்லை என்கிற விமர்சனங்கள் எழுந்தன. ரஜினிகாந்த், விஜய், தனுஷ் உள்ளிட்ட பலர் ஹீரோவாக நடிக்கவே தகுதியில்லாதவர்கள் என அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டனர். ஆனால், அதையெல்லாம் கடந்து இன்று அவர்கள் அடைந்திருக்கும் ஸ்டார் அந்தஸ்த்து முழுக்க முழுக்க அவர்களது விடாமுயற்சி மற்றும் உழைப்பால் கிடைத்த பலன் தான். பிரதீப் ரங்கநாதனை இயக்குநராக பாராட்டிய சினிமா வட்டாரம் அவர் ஹீரோவானதை ஏற்றுக் கொள்ள மனமில்லாமல் கடும் விமர்சனங்களை முன் வைத்தன. ஆனால், தனது முதல் படமான லவ் டுடே படத்தில் நடிகராகவும் தன்னால் வெற்றியைக் கொடுக்க முடியும் என நிரூபித்துக்காட்டினார் பிரதீப் ரங்கநாதன்.

LIK Pradeep Ranganathan Nayanthara

விக்னேஷ் சிவன் படம்: நயன்தாரா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டியும் முக்கிய கதாபாத்திரத்தில் எஸ்.ஜே. சூர்யாவும் நடித்து வருகின்றனர். அந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் விரைவில் ரிலீஸ் ஆக காத்திருப்பதாகவும் கூறுகின்றனர். அஜித் குமார் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு பின்னர், விக்னேஷ் சிவனை நிராகரித்த நிலையில், பிரதீப் ரங்கநாதனை வைத்து இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

எல்ஐசி டைட்டில் சர்ச்சை: பிரதீப் ரங்கநாதனை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இந்த படத்துக்கு LIC என்றே டைட்டில் வைத்து படத்தை ஆரம்பித்தனர். மேலும், அதன் முழு டைட்டிலாக லவ் இன்சுரன்ஸ் கம்பெனி என்பது தான் அர்த்தம் என்றும் கூறப்பட்டது. ஆனால், இந்த டைட்டிலுக்கு எதிராக எல்ஐசி நிறுவனம் நோட்டீஸ் அனுப்பிய நிலையில், தற்போது டைட்டிலில் சிறிய மாற்றத்தை செய்துள்ளனர்.

இதுதான் டைட்டில்: லவ் இன்சுரன்ஸ் கம்பெனி என்கிற டைட்டிலை மாற்ற வேண்டாம் என நினைத்த விக்னேஷ் சிவன் LIK - Love Insurance Kompany என தற்போது படத்தின் டைட்டிலை மாற்றியுள்ளார். அதனை தனது பிறந்தநாளை முன்னிட்டு பிரதீப் ரங்கநாதன் வெளியிட்டுள்ளார். அடுத்ததாக இவர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் 'டிராகன்' எனும் படத்தில் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X