பத்தாயிரம் வாலா பட்டாசுக்கு என்ன ஆச்சு?.. மீண்டும் தள்ளிப்போன LIK?.. மிஸ்ஸான ஹாட்ரிக் 100 கோடி?
சென்னை: இந்த மாதம் டிசம்பர் 5ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட கார்த்தியின் 'வா வாத்தியார்' மற்றும் அனுபமா பரமேஸ்வரனின் லாக்டவுன் உள்ளிட்ட படங்கள் ஒரு வாரம் தள்ளிப்போய் இந்த வாரம் டிசம்பர் 12ம் தேதி வெளியாகப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தீபாவளிக்கு ரிலீஸ் ஆகாமல் போன பிரதீப் ரங்கநாதனின் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 18ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு 2 பாடல்களும் இதுவரை வெளியாகின.

ஆனால், படத்தின் புரொமோஷன் பணிகள் இன்னமும் துவங்கப்படாமல் உள்ள நிலையில், LIK திரைப்படத்தின் ரிலீஸ் அடுத்த ஆண்டுக்கு தள்ளிப்போவதாக தகவல்கள் கசிந்துள்ளன.
பத்தாயிரம் வாலா பட்டாசு: கோமாளி படத்தில் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே, டிராகன், டியூட் என தொடர்ந்து பத்தாயிரம் வாலா பட்டாசு போலவே பாக்ஸ் ஆபீஸில் செஞ்சுரிகளாக அடித்து வருகிறார். லவ் டுடே படத்திற்கு பிறகு தொடங்கப்பட்ட விக்னேஷ் சிவனின் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படம் மட்டுமே தொடர்ந்து அவருக்கு தொல்லை கொடுக்கும் விதமாக ரிலீஸ் தேதி தள்ளிப்போய்க்கொண்டே இருப்பது ரசிகர்களை அப்செட் ஆக்கியுள்ளது.
மிஸ்ஸான ஹாட்ரிக்: இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான பிரதீப் ரங்கநாதனின் டிராகன் திரைப்படம் 150 கோடி வசூலை கடந்த நிலையில், தீபாவளிக்கு வெளியான டியூட் திரைப்படமும் 100 கோடி வசூலை கடந்து சாதனை படைத்தது. அந்த படத்துக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் குவிந்த நிலையிலும், ஜென் ஸி ரசிகர்கள் மத்தியில் அந்த படம் சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில், லவ் இன்சூரன்ஸ் கம்பெனி டிசம்பர் 18ம் தேதி வெளியாகி இன்னொரு 100 கோடி பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை பிரதீப் ரங்கநாதனுக்கு கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த படம் திட்டமிட்டபடி டிசம்பர் 18 வெளியாகாது என தகவல்கள் வெளியாகி உள்ளன.
காதலர் தின ரிலீஸ்: ஷாருக்கான் போல ஒரே வருடத்தில் 3 படங்களை வெளியிட்டு விட்டு அதன் பின்னர் சில ஆண்டுகள் எந்தவொரு படமும் வராமல் இருப்பதற்கு பதிலாக அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் காதலர் தினத்துக்கு லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தை ரிலீஸ் செய்தால், இன்னொரு 100 கோடி பிரதீப் ரங்கநாதன் பெயரில் அடுத்த ஆண்டு எழுதப்படும். அதுவும் நல்ல யோசனை தான் எனக் கூறுகின்றனர்.
அனிருத் தான் காரணமா?: இசையமைப்பாளர் அனிருத் ஜன நாயகன் படத்தின் இசை பணிகளில் பிசியாக இருப்பது தான் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம் தள்ளிப்போக காரணம் என்றும் கூறுகின்றனர். தயாரிப்பாளர் லலித் மற்றும் விக்னேஷ் சிவன் இடையிலான பிரச்சனை தான் காரணம் என்றும் சில தகவல்கள் வெளியாகி உள்ளன. எவ்வளவு சீக்கிரம் முடிகிறதோ இன்னொரு பிரதீப் ரங்கநாதன் படம் ரிலீஸ் ஆனால், தியேட்டர் ஓனர்கள் ஜாலியாகி விடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











