Dragon Box Office Day 1: பாக்ஸ் ஆபிஸில் ஃபயர் விடும் டிராகன்.. வசூல் ராஜாவாக மாறிய பிரதீப் ரங்கநாதன்

சென்னை: அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் டிராகன். இந்தப் படம் நேற்று அதாவது, பிப்ரவரி 21ஆம் தேதி ரிலீஸ் ஆனது. ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து ரிலீஸ் செய்துள்ள இந்த படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தின் முதல் நாள் வசூல் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

கல்லூரியில் பேராசிரியர் பேச்சைக் கேட்காமல் திரிவதுதான் கெத்து என நினைத்துக் கொண்டிருந்த மாணவன், 48 அரியருடன் கல்லூரியை விட்டு வெளியே போகிறான். இதனால் வேலை கிடைக்காமல், நண்பர்கள் தயவுடன் வாழ்கிறான். இப்படி இருந்தவனை, காதலியும் கழட்டி விட்டுட்டு போக, அதன் பின்னர் சில ஏமாற்று வேலைகள் செய்கிறான். இதனால் அவனுக்கு மிகப்பெரிய நிறுவனத்தில் மிகப்பெரிய சம்பளத்தில் வேலை செய்கிறான்.

Dragon Dragon Box Office Pradeep Ranganathan

இதனால் வாழ்க்கையில் இன்னொரு பெண் வர, அந்த நேரத்தில் கல்லூரியின் பிரின்ஸ்பல், கண்ணில் கதாநாயகன் மாட்ட, அதன் பின்னர் என்ன ஆனது என்பதுதான் கதை. இந்தக் கதையை எந்த அளவிற்கு காமெடியாகவும் கலகலப்பாகவும், ட்விஸ்ட் அண்ட் ட்ர்ன்ஸ் உடன் சுவாரஸ்யமாக படமாக்க முடியுமோ, அந்த அளவுக்கு சிறப்பாக படமாக்கியுள்ளார் அஸ்வத் மாரிமுத்து. இந்த ஆண்டு இதுவரை ரிலீஸ் ஆன படங்களில், வெற்றிப் படங்களாக மாறிய படங்களின் பட்டியலில் டிராகன் படத்திற்கும் கட்டாயம் இடம் உண்டு.

பிரதீப் ரங்கநாதன்: படத்தை தனது நடிப்பின் மூலம் தூக்கி நிறுத்துகிறார் பிரதீப் ரங்கநாதன். டிராகன் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி போயுள்ளார். படத்தின் இன்னொரு பலம் என்றால், வசனம், பல இடங்களில் தியேட்டரே வெடித்து சிரிக்க வசனங்கள் மிக முக்கியமான காரணமாக இருந்துள்ளது. படம் பார்த்த பெரும்பாலான ரசிகர்கள் படத்தை பாராட்டி வருகிறார்கள். இந்த ஆண்டில் தனது தயாரிப்பில் ஏ.ஜி.எஸ் நிறுவனம் வெளியிடும் முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட்டாக மாறியுள்ளது.

Dragon Dragon Box Office Pradeep Ranganathan

மிஷ்கின்: படத்தின் பின்னணி இசை, பாடல்கள் என அனைத்திலும் ஸ்கோர் செய்துள்ளார் லியோன் ஜேம்ஸ். பிரதீப் ரங்கநாதனுக்கு பிறகு நடிப்பில் ஸ்கோர் செய்தவர் என்றால் அது மிஷ்கின் தான். மிடுக்கான பிரின்ஸ்பல் கதாபாத்திரத்தில் மிரட்டி விட்டுள்ளார். அவர் வரும் ஒவ்வொரு காட்சியும் கலக்கல்தான். குறிப்பாக டிராகன் கதாபாத்திரத்தை வாட்டி வதைக்கும் காட்சிகள் எல்லாம் அல்டிமேட்.

Dragon Dragon Box Office Pradeep Ranganathan

வசூல்: படம் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 300 ஸ்க்ரீன்களில் ரிலீஸ் ஆனது. இந்தியா முழுவதும் முதல் நாளில் சுமார் 1,000 காட்சிகளுக்கு மேல் திரையிடப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலும் தயாரிப்பு நிறுவனம் ரிலீஸ் செய்துள்ளது. படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்கள் வந்ததால், நைட் ஷோவில் அதிகப்படியான ரசிகர்களை படத்தைப் பார்த்துள்ளார்கள். இதனால் படம் இந்தியா முழுவதும் சுமார் ரூபாய் 8 கோடிகள் வரையிலும் உலகம் முழுவதும் ரூபாய் 14 கோடிகளும் வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படத்திற்கு வார இறுதி நாட்களில் ரசிகர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் வசூல் மேலும் அதிகரிக்கும் என படக்குழு நம்புகிறது.

Dragon Dragon Box Office Pradeep Ranganathan

பொறுப்பு துறப்பு: படங்களின் வசூல் குறித்த தகவல்கள் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் பெறப்பட்ட தகவலே தவிர, படக்குழு சார்பில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ வசூல் விபரம் அல்ல.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X