இளம் இயக்குனர் பிரதீப் ரங்கநாதனுக்கு இன்று பிறந்தநாள்.. வாழ்த்துக்களை பொழிந்த பிரபலங்கள் !

சென்னை : தனது முதல் படைப்பிலேயே சிக்ஸர் அடித்து கோலிவுட்டை திரும்பிப்பார்க்க வைத்தவர் வளர்ந்து வரும் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்.

Recommended Video

கோமாளி படத்தில் நடித்த பட்ஜி போடும் Aunty யார்? |Comali Movie

சென்ற ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தை இயக்கிய இவர் தற்பொழுது கோலிவுட்டில் மிக பிரபலமான இளம் இயக்குனராக திகழ்கிறார்.

இந்நிலையில் ஜூலை 25 ஆம் தேதியான இன்று இவர் தனது பிறந்த நாளை கொண்டாடி வருவதையொட்டி பலரும் வாழ்த்துக்களைச் சொல்லி வரும் நிலையில், கோலிவுட்டை சேர்ந்த பல்வேறு திரைப்பட பிரபலங்களும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

100 நாட்களை கடந்து

100 நாட்களை கடந்து

பல வெற்றிக் குறும்படங்களை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் தற்பொழுது திரைப்படங்களையும் இயக்கி வெற்றிகரமாக வலம் வருகிறார். இவர் இயக்கிய முதல் திரைப்படமே 100 நாட்களை கடந்து ஓடிய நிலையில் இவரின் இரண்டாவது படத்தில் யார் நடிக்கப் போகிறார் என எதிர்பார்ப்பு பலரையும் எதிர் பார்க்க வைத்துள்ளது.

கோமாளி திரைப்படம்

கோமாளி திரைப்படம்

சென்ற ஆண்டு ஜெயம் ரவி, யோகி பாபு, காஜல் அகர்வால் போன்றவர்களின் அசத்தும் நடிப்பால் வெளியான கோமாளி திரைப்படம் பலரையும் ரசிக்க வைத்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. 1990க்கு முன்பு பிறந்த ஒருவர் எதிர்பாராத விதமாக கோமா நிலைக்குச் செல்ல பின் பல ஆண்டுகள் கழித்து கோமாவில் இருந்து வெளிவந்ததும் சுற்றி இருக்கின்ற பல்வேறு விதமான மாறுதல்களை நகைச்சுவையாகவும் சமூக அக்கறையுடனும் சொல்லியிருக்கும் இந்த திரைப்படம் பலரையும் வெகுவாக கவர்ந்தது.

10க்கும் மேற்பட்ட போஸ்டர்கள்

10க்கும் மேற்பட்ட போஸ்டர்கள்

வாட்ஸ்அப் காதல், அப்பா லாக், ஹைவே காதலி உள்ளிட்ட குறும்படங்களை இயக்கி வந்த பிரதீப் ரங்கநாதன் முதன் முதலாக இயக்கிய கோமாளி திரைப்படம் வெளியாவதற்கு முன்பே பல்வேறு தனித்துவமான விசேஷங்களை கொண்டிருந்தது. பொதுவாக ஒரு படத்திற்கு ஒன்று அல்லது இரண்டு போஸ்டர்கள் வெளியிடுவார்கள் ஆனால் தனது முதல் படத்திலேயே கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட வித்தியாச வித்தியாசமான கெட்டப்பில் போஸ்டர்களை வெளியிட்டு கோலிவுட்டை தொடர்ந்து எதிர்பார்ப்பிலேயே வைத்திருந்தார்.

சர்ச்சைக்குரிய காட்சியை நீக்கிவிட்டு

சர்ச்சைக்குரிய காட்சியை நீக்கிவிட்டு

மேலும் இதன் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தை கேலி செய்யும் வகையில் ஒரு சில காட்சிகள் இருந்ததாக இந்த படத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பின பிறகு படக்குழு குறிப்பிட்ட சர்ச்சைக்குரிய காட்சியை முழுவதுமாக நீக்கிவிட்டு வெளியிட்டது.

நம்பிக்கையான இயக்குனர்

நம்பிக்கையான இயக்குனர்

இவ்வாறு தனது முதல் படத்திலேயே பல்வேறு புதுப்புது பிரச்சினைகளை சந்தித்து வந்த பிரதீப் ரங்கநாதன் ஓவர் நைட்டில் ஒபாமா ஆனா கதையாக தனது முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்து கோலிவுட்டில் நம்பிக்கையான இயக்குனர் என்ற பெயரை பெற்றுள்ளார்.

அதிகாரப்பூர்வ தகவல்கள்

அதிகாரப்பூர்வ தகவல்கள்

இந்நிலையில் இவரது இரண்டாவது படம் எந்த மாதிரி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு பலரையும் யோசிக்க வைக்கும் நிலையில், அதைப் பற்றிய தகவல்கள் இன்னும் எதுவும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

பிறந்தநாள்

பிறந்தநாள்

இவ்வாறு வளர்ந்து வரும் இளம் இயக்குனர்களில் தனித்துவமான பண்பை கொண்ட பிரதீப் ரங்கநாதன், ஜூலை 25 ஆம் தேதியான இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி இவரது நண்பர்கள் மற்றும் நலன்விரும்பிகள் என பலரும் வாழ்த்துக்களைச் சொல்லி வரும் நிலையில், ஜெயம் ரவி, காஜல் அகர்வால் உள்ளிட்ட பல திரை பிரபலங்களும் வாழ்த்துக்களை சமூக வலைதளங்களின் மூலம் பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X