Pradeep Ranganathan: பிரதீப் ரங்கநாதனுக்கு HBD.. தரமான போஸ்டரை இறக்கிய விக்னேஷ் சிவன்!
சென்னை: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குநர் மற்றும் நடிகராக இருப்பவர் பிரதீப் ரங்கநாதன். மொத்தமாகவே மூன்று படங்கள் அதில் இயக்கத்தில் இரண்டு படங்கள், நடிப்பில் இரண்டு படங்கள் என ஹாட்ரிக் ஹிட் அடித்த பிரதீப் ரங்கநாதன் இன்று அதாவது ஜூலை 25 ஆம் தேதி தந்து 32வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் அவர் நடிப்பில் வெளியாகவுள்ள லவ் இன்சுரன்ஸ் கம்பனி படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து சொல்லி உள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன். அது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான கோமாளி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. தனது முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி வரவேற்பை ஏற்படுத்திக் கொண்டவர். இயக்குநராக அறிமுக படமே மிகப்பெரிய வெற்றிப் படமாக இருந்தது. அதன் பின்னர், இவரே இயக்கி, இவரே கதாநாயகனாகவும் நடித்த படம் லவ் டுடே. இந்த படமும் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. இணையமும் இன்றைய கால காதலும் எப்படி உள்ளது என அவரது பார்வையில் படத்தை எடுத்திருந்தார். படம் முழுக்க பல இரட்டை அர்த்த வசனங்கள் இருந்தாலும் படம் ஹிட் அடித்தது.

ஹாட்ரிக் ஹிட்: இது மட்டும் இல்லாமல், படமும் 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது. கதாநாயகனாக அவர் அறிமுகமான படத்திலேயே ரூபாய் 100 கோடிகளுக்கு மேல் வசூலை அள்ளிக் கொடுத்தார். அதேபோல் இந்த ஆண்டில் பிப்ரவரி மாதம் வெளியான டிராகன் படம் பிரதீப் ரங்கநாதனை மேலும் உயர்த்தியது. இந்த படமும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கியிருந்தார். படத்தில் அனைத்து தரப்பு ஆடியன்ஸையும் கவரும் வகையிலான காட்சிகளை வைத்து ஒரு தரமான படத்தை வெளியிட்டதால் அது பிரதீப்க்கு ஹாட்ரிக் வெற்றியாக அமைந்தது.
புது போஸ்டர்: இந்நிலையில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள படம் லவ் இன்சுரன்ஸ் கம்பனி. இந்த படத்தை விக்னேஷ் சிவன் எழுதி இயக்கியுள்ளார். படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் மற்றும் ரவுடி பேபி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. படத்தின் நாயகன் பிரதீப் ரங்கநாதனுக்கு இன்று பிறந்த நாள் என்பதால் படக்குழு சார்பில் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். அதில் பிரதீப் ரங்கநாதனின் ஒரு கை இரும்புக் கைபோல உள்ளது. ஆனால் இந்த போஸ்டர், ஏதாவது பாடல் காட்சியில் இருந்து உருவாக்கப்பட்டிருக்கலாம் என ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.

அப்டேட்: மேலும் படத்தின் தரமான அப்டேட் ஆகஸ்ட் 1ஆம் தேதி இருக்கும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது. ஏற்கனவே பிரதீப் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் ட்யூட் படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளதால், லவ் இன்சுரன்ஸ் கம்பனி படம் செப்டம்பர் 18ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆகஸ்ட் 1ஆம் தேதி படத்தின் இரண்டாவது பாடல் ரிலீஸ் தொடர்பான அப்டேட்டாக அது இருக்குமா என ரசிகர்கள் காத்துக் கொண்டு உள்ளார்கள். பிரதீப் ரங்கநாதனுக்கு வாழ்த்துகள் குவிந்து கொண்டு உள்ளது. பிறந்தநாள் வாழ்த்துகள் பிரதீப் ரங்கநாதன்.


Click it and Unblock the Notifications











