Dragon Pre Booking: சின்ன தனுஷை வைத்து தனுஷுடன் மோதும் ஏஜிஎஸ்.. ஹவுஸ் ஃபுல் புக்கிங்கா இருக்கேப்பா!

சென்னை: அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், மிஷ்கின், அனுபமா பரமேஸ்வரன், கயடு லோஹர், வி.ஜே. சித்து, ஹர்ஷத், கவுதம் வாசுதேவ் மேனன், மரியம் ஜார்ஜ், சித்ரா உள்ளிட்ட பலர் நடித்து உருவான படம் டிராகன். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். படம் வரும் 21ஆம் தேதி அதாவது நாளை ரிலீஸ் ஆகவுள்ளது. அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. படத்தின் புக்கிங் எப்படி உள்ளது என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

கடந்த 13ஆம் தேதி படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய படத்தின் நாயகன் பிரதீப் ரங்கநாதன், தனது உரையின் கடைசி சில நிமிடங்கள் பேசியது பலரது கவனத்தை ஈர்த்தது. மேலும் அவரது பேச்சுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது. பிரதீப் ரங்கநாதன் பேசும்போது, "இந்த நேரத்தில் சிலர் என்னை அடிக்கவும் செய்கிறார்கள்.

Pradeep Ranganathan Dragon Dragon Pre Booking

அதை எல்லாம் நான் பார்த்துக் கொண்டுதான் உள்ளேன். அது யார்? அவர்கள் எதற்காக இப்படி செய்கிறார்கள் என்பதற்குள் போக வேண்டாம். என்னை அடிப்பவர்களுக்கு எல்லாம் ஒன்றுதான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். ஒரு செடி வளரும் போது சிலர் இலையை பறித்து போட்டுவிட்டு போவார்கள். சிலர் அந்த செடியின் காம்பை உடைத்து போட்டுவிட்டு போவார்கள். சிலர் மிதித்துவிட்டு போவார்கள்.

Pradeep Ranganathan Dragon Dragon Pre Booking

ஆனால் அந்தக் காலகட்டத்தில் எல்லாம் செடியின் வேர், பூமிக்கு கீழே வலிமையாக வளர்ந்து கொண்டுதான் இருக்கும். அந்த செடி மட்டும் இப்போது மற்றவர்கள் கொடுக்கும் வலி அனைத்தையும் தாங்கி விட்டால், அந்த செடி எதிர்காலத்தில் மிகப்பெரிய மரமாக வளர்வதை யாராலும் தடுக்க முடியாது" என பேசினார். இவரது பேச்சை பலரும் பாராட்டினார்கள். பலர், இவர் என்ன இசை வெளியீட்டு விழாவில் ரஜினி, விஜய், தனுஷ் மாதிரி குட்டிக் கதை சொல்லிக் கொண்டு உள்ளார் என விமர்சிக்கவும் செய்தனர்.

Pradeep Ranganathan Dragon Dragon Pre Booking

ஏஜிஎஸ்: படத்தை தயாரித்துள்ள ஏ.ஜி.எஸ் நிறுவனம் படத்தை தமிழ்நாடு, இந்தியா மட்டும் இல்லாமல் வெளிநாடுகளிலும் ரிலீஸ் செய்துள்ளது. இதன் மூலம் படத்தின் லாபத்தை அதிகரிக்க முடியும் என தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது என கூறப்படுகிறது. மேலும் தயாரிப்பு நிறுவனம் படத்தை நேரடியாக ரிலீஸ் செய்வதால் படம் இந்த அளவிற்கு சிறப்பாகவும் மக்கள் மனதைக் கவரக்கூடிய வகையில் இருப்பதாக பலரும் தெரிவிக்கிறார்கள்.

Pradeep Ranganathan Dragon Dragon Pre Booking

புக்கிங்: இப்படியான நிலையில் டிராகன் படத்தின் புக்கிங் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார மாவட்டங்களில் சிறப்பாக சென்று கொண்டு உள்ளது. பல காட்சிகளில் படத்திற்கான அனைத்து டிக்கெட்டுகளும் புக் ஆகிவிட்டது. புக் மை ஷோ தளத்தில் பெரும்பாலான காட்சிகள் முதல் மூன்று தினங்களுக்கு நன்கு புக் ஆகியுள்ளது. அதாவது பெரும்பாலான தியேட்டர்களில் பெரும்பாலான காட்சிகளுக்கு 90 சதவீதத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் இதுவரை புக் ஆகியுள்ளது. நாளை படம் ரிலீஸ் ஆவதற்குள் இந்த 90 சதவீதம் என்பது 100 சதவீதமாக மாறிவிடும் என படக்குழு நம்புகிறது.

Pradeep Ranganathan Dragon Dragon Pre Booking

கமெண்ட்: படத்தின் ப்ரீ புக்கிங்கைப் பார்க்கும்போது படத்திற்கான எதிர்ப்பார்ப்பை படக்குழு புரிந்து கொண்டுள்ளது. படத்தின் வசூல் முதல் நாளில் இருந்தே அதிகம் இருக்கும் என படக்குழுவுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. டிராகன் படத்தின் ப்ரீ புக்கிங்கைப் பார்த்த பலரும் சின்ன தனுஷை வைத்து அதாவது பிரதீப் ரங்கநாதனை வைத்து தனுஷுடன் ( நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்) மோதுறாங்க என கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

Pradeep Ranganathan Dragon Dragon Pre Booking
Pradeep Ranganathan Dragon Dragon Pre Booking
Pradeep Ranganathan Dragon Dragon Pre Booking

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X