Dude: ரிலீஸ்க்கு முன்னாடியே இத்தனை கோடிகள் லாபமா? பிரதீப் ரங்கநாதனுக்கு எங்கேயோ மச்சம் இருக்குப்பா!

சென்னை: பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் நாளை வெளியாகவுள்ள படம் டியூட். இந்த படத்தை மைத்ரி மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் மமிதா பைஜு, சரத்குமார், ரோகிணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகிறார் கீர்த்தீஸ்வரன். அதேபோல் இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக தனது கெரியரை தமிழ் சினிமாவில் தொடங்குகிறார் சாய் அபயங்கர். இப்படி இருக்கும்போது படம் ஏற்கனவே தங்களுக்கு ரூபாய் 35 கோடிகள் வரை லாபம் கொடுத்துவிட்டதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் நாளை வெளியாகவுள்ள படம் டியூட். இந்த படம் இவரது நடிப்பில் வெளியாகும் மூன்றாவது படம். இவரது நடிப்பில் வெளியான முதல் இரண்டு படங்களும் பெரும் வெற்றிப் படங்களாக மாறியது. இன்னும் சொல்லப்போனால் அவரது முதல் படமே, ரூபாய் 100 கோடிகளுக்கு மேல் வசூலித்தது. அதேபோல் இந்த ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி ரிலீஸ் ஆன டிராகன் படமும் பெரிய வெற்றியைப் பெற்றது. அதாவது டிராகன் படமும் வணிக ரீதியாக ரூபாய் 150 கோடிகளுக்கு மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது.

Pradeep Ranganathan Dude Movie Get Profit 35 Crores Before Theatrical Release By Mythri Movies
Photo Credit:

தீபாவளி ரிலீஸ்: இந்நிலையில் நாளை வெளியாகவுள்ள டியூட் படத்துடன் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் த்ருவ் விக்ரம் நடித்த பைசன் படமும், அதேபோல் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள டீசல் படமும் வெளியாக உள்ளது. இந்த மூன்று படங்களும் நேரடியாக தமிழிலும் அண்டை மாநிலங்களிலும் வெளியாகிறது. தீபாவளி தொடர் விடுமுறையை கவனத்தில் கொண்டு இந்த மூன்று படங்களும் வெளியாக உள்ளது. இதில் தற்போது வரை புக் மை ஷோவில் அதிக அளவில் புக்கிங் ஆகியுள்ள படம் என்றால் அது, டியூட் படமாகத்தான் உள்ளது.

ரசிகர்கள் ஆர்வம்: டீசல் படம் ஜனரஞ்சகமான கதையோட்டத்துடன் ஒரு சீரியஸான கதைக்களத்தை கொண்டு உருவாக்கப்பட்ட படமாக உள்ளது. அதேபோல், பைசன் படம் 1990களில் நடைபெறும் கதைக் களத்தை கொண்டதாக உள்ளது.மேலும், பைசன் படம் அரசியல் நோக்குடன் எடுக்கப்பட்ட படமாகவும் உள்ளது. இப்படி இருக்கும்போது இதில் டியூட் படம் வழக்கமான மசாலா பட பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன், காரணமாக கூட ரசிகர்கள் இந்த படத்தைப் பார்க்க ஆர்வம் காட்டியிருக்கலாம்.

Pradeep Ranganathan Dude Movie Get Profit 35 Crores Before Theatrical Release By Mythri Movies
Photo Credit:

35 கோடிகள் லாபம்: இப்படி இருக்கும்போது, படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரீ மூவீஸ் நிறுவனம் தெரிவித்துள்ள தகவல் திரைத்துறையில் கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது, அவர்கள் தெரிவிக்கும்போது, " டியூட் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆவதற்கு முன்னரே எங்களுக்கு ரூபாய் 35 கோடிகள் வரை லாபம் கொடுத்து விட்டது. மேலும் படத்தை நாங்கள் தமிழ்நாட்டு ரசிகர்களை கவனத்தில் கொண்டுதான் முதலில் தயாரித்தோம். படம் பார்த்த பின்னர் தெலுங்கு ஆடியன்ஸ்க்கும் இந்த படம் பிடிக்கும் என்று நம்புகிறோம். மேலும் படத்தை ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் நாங்களே ரிலீஸ் செய்கிறோம்" என்று தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் டியூட் படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் ரிலீஸ் செய்கிறது. இந்த படத்தில், " தங்கா தங்கா.. ரிங்கா ரிங்கா" என்ற பாடலைப் பாடி பாடகராகவும் களமிறங்கி உள்ளார் பிரதீப் ரங்கநாதன்.

Pradeep Ranganathan Dude Movie Get Profit 35 Crores Before Theatrical Release By Mythri Movies
Photo Credit:

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X