Dude: சட்டை இல்லாமல் நிற்கும் பிரதீப் ரங்கநாதன். வெச்ச கண்ணு எடுக்காமல் பார்க்கும் மமிதா பைஜு!

சென்னை: இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் படங்கள் இயக்குவதை காட்டிலும் நடிப்பில்தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இவரது நடிப்பில் வெளியாகும் படங்களும் படம் ரிலீஸ் ஆகி அடுத்த சில நாட்களில் ரூபாய் 100 கோடிகள் கிளப்பில் இணைந்து விடுகிறது. இவரது நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் டியூட். இந்த படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது படத்தின் இரண்டாவது போஸ்டர் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

பிரதீப் ரங்கநாதன் என்பதை விடவும் சென்சேஷன் பிரதீப் ரங்கநாதன் என்று தான் கூறவேண்டும். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான டிராகன் படம் வசூல் மற்றும் விமர்சனத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படம் வசூலில் மட்டும் கிட்டத்தட்ட ரூபாய் 150 கோடிகள் வரை வசூல் செய்துள்ளது என்றும், இது மட்டும் இல்லாமல், ஓடிடி பிசினஸ் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரிய லாபம் என்று திரைத்துறையில் பேச்சுகள் அடிபடுகிறது.

இவரைப் பலரும் தனுஷ் போல நடிக்கிறார். பார்ப்பதற்கு தனுஷ் போல ஒல்லியாகவும் இருக்கிறார் என்பதால் பலரும் அவரை குட்டி தனுஷ் என்று கூட அழைக்கிறார்கள். ஆனால் பிரதீப் ரங்கநாதன் தனது நடிப்பில் தனக்கென தனி பாணியை பின்பற்றி வருகிறார். இது மட்டும் இல்லாமல், இவர் தனது முதல் படமான கோமாளி படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நடித்திருந்தார். அதன் பின்னர் தனது இரண்டாவது படமான லவ் டுடே படத்தை இயக்கியது மட்டும் இல்லாமல், அந்த படத்தில் அவரே நடிக்கவும் செய்திருந்தார். இவரது இயக்கத்தில் வெளியான இரண்டு படங்களும் பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது. இந்த படத்திலேயே தனக்கு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார்.

Pradeep Ranganathan Dude Movie Scond Look With Actress Mamitha Baiju

டியூட் படம்: இந்நிலையில் இவரது நடிப்பில் உருவாகி வரும் படம் டியூட். இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தை அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் எழுதி இயக்குகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை மமிதா பைஜூ நடிக்கிறார். இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். சரத்குமார், ரோகிணி உள்ளிட்ட பலர் படத்தில் நடிக்கிறார்கள்.

தீபாவளி ரேஸ்: இந்த ஆண்டுதான் படப்பிடிப்பு தொடங்கியது. ஆனால் படக்குழு சில தினங்களுக்கு முன்னர் படத்தின் போஸ்டரை வெளியிட்டு படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று தெரிவித்தார்கள். இது மட்டும் இல்லாமல், படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்டார்கள். இந்த ஃபர்ஸ்ட் லுக்கில் பிரதீப் ரங்கநாதன் கையில் தாலியுடன் இருக்கிறார். மேலும் படம் தீபாவளிக்கு வெளியாகிறது என அறிவிக்கப்பட்டதும், சூர்யாவின் 45 வது படத்துடன் பிரதீப் ரங்கநாதன் படம் மோதவுள்ளது என்று பேச்சுகள் அதிகரித்தது. அதாவது சூர்யாவின் 45 வது படமும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது என்று கூறப்படுகிறது.

Pradeep Ranganathan Dude Movie Scond Look With Actress Mamitha Baiju

செகண்ட் லுக்: இந்நிலையில் படக்குழு இன்று இரண்டாவது போஸ்டரை வெளியிட்டுள்ளது. இதில் பிரதீப் ரங்கநாதன் சட்டை அணியாமல் டவுசர் மட்டும் அணிந்து கொண்டு நிற்கிறார். அவரை மமிதா பைஜு வெச்ச கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டு உள்ளார். இந்த போஸ்டரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X