என்ன கொடுமை சார் இது.. பிரதீப் ரங்கநாதனிடம் வாய்ப்பு கேட்ட பிரேம்ஜி.. லவ் டுடே இயக்குநர் ட்வீட்!

சென்னை: யுவன் சங்கர் ராஜாவை ஃபிராடுன்னு பிரதீப் திட்டிய பழைய ட்வீட்களை எடுத்து போட்டு நெட்டிசன்கள் விளாசி வரும் நிலையில், லவ் டுடே இயக்குநரிடம் வாய்ப்பு கேட்டு நடிகர் பிரேம்ஜி போட்டுள்ள பதிவு அவரையே ஷாக் ஆக்கி விட்டது.

காமெடி நடிகராக பல ஆண்டுகளாக பிரேம்ஜி நடித்து வந்தாலும், அண்ணன் வெங்கட் பிரபுவின் படங்களில் மட்டும் தான் அவருக்கு வாய்ப்பு கிடைத்து வருகிறது என சினிமா வட்டாரத்தில் வெளிப்படையான பேச்சுக்களே பலமுறை எழுந்துள்ளன.

இந்நிலையில், லவ் டுடே படம் பெரிய வெற்றி அடைந்த நிலையில், சார் உங்க அடுத்த படத்தில் ஒரு சான்ஸ் கொடுங்க என லவ் டுடே படத்தின் ஹீரோ மற்றும் இயக்குநருமான பிரதீப் ரங்கநாதனிடம் காமெடி நடிகர் பிரேம்ஜி கேட்டுள்ளார்.

கிளம்பிய பிரச்சனை

கிளம்பிய பிரச்சனை

கொஞ்சம் வளர்ந்து விட்டாலே போதும், அவர்கள் செய்த நல்ல விஷயங்களை விட்டு விட்டு மோசமான விஷயங்களை தோண்டி எடுத்து ஆளை காலி செய்து விடுவீர்களே என பிரதீப் ரங்கநாதனின் பழைய சர்ச்சைக்குரிய போஸ்ட்டுகளை பரப்பி வரும் நெட்டிசன்களை பிரதீப்பின் ரசிகர்கள் விளாசி வருகின்றனர். முன்னணி சினிமா பிரபலங்களான விஜய், யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட பலரை பிரதீப் இளம் வயதில் விமர்சித்துள்ள போஸ்ட்டுகள் வெளியாகி பிரதீப்பிற்கு பெரிய பிரச்சனையை உருவாக்கி உள்ளது.

தப்பு பண்ணிட்டேன்

தப்பு பண்ணிட்டேன்

இந்நிலையில், மோசமான போஸ்ட்டுகள் எடிட் செய்யப்பட்டது என்றும், சில போஸ்ட்டுகளை நான் தான் போட்டேன். ஆனால், அது அப்போ, இப்போ நான் அப்படியில்லை. என் தவறுக்கு என்னை மன்னித்து விடுங்கள் என பிரதீப் ரங்கநாதன் பிரச்சனையை பெரிதாக வளர விடாமல் உடனடியாக மன்னிப்பு கேட்டு விட்டார்.

வாய்ப்பு கேட்ட பிரேம்ஜி

வாய்ப்பு கேட்ட பிரேம்ஜி

இந்நிலையில், லவ் டுடே படத்தின் வெற்றி காரணமாக கோலிவுட்டின் இளம் நாயகனாக மாறி உள்ள பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடிக்கும் அடுத்த படத்தில் ஒரு சின்ன ரோலாவது கொடுங்க சார் என நடிகர் பிரேம்ஜி போட்டுள்ள ட்வீட் ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் திருப்பி விட்டது. 2014ல் பிரதீப் ரங்கநாதன் தனது குறும்படத்தின் லிங்கை ஷேர் செய்து பிரேம்ஜியிடம் பார்த்து விட்டு லைக் பண்ணுங்க சார் என கோரிக்கை வைத்த நிலையில், இப்போ பிரதீப்பின் நிலை எப்படி மாறிவிட்டது என்பதை காட்டவே பிரேம்ஜி அப்படியொரு ட்வீட்டை போட்டிருக்கிறார்.

என்ன கொடுமை சார் இது

என்ன கொடுமை சார் இது

சார்.. நீங்க இப்படி ட்வீட் போடுறதுக்கே ரொம்ப பெரிய மனசு வேண்டும். ரொம்ப ரொம்ப நன்றி சார், இதை நான் சொல்லியே ஆகணும் "என்ன கொடுமை சார் இது" என பிரேம்ஜியின் ட்வீட்டுக்கு பதில் ட்வீட் போட்டு பிரதீப் ரங்கநாதன் கலவர பூமியாக இருந்த சோஷியல் மீடியாவையே கலகலப்பாக்கி உள்ளார்.

தெலுங்கில் லவ் டுடே

தெலுங்கில் லவ் டுடே

தமிழில் சூப்பர் ஹிட் அடித்துள்ள லவ் டுடே திரைப்படத்தின் டிரைலர் நேற்று முன் தினமே வெளியாக இருந்த நிலையில், மகேஷ் பாபு அப்பா மறைவு காரணமாக தள்ளி வைத்த நிலையில், தற்போது விஜய் தேவரகொண்டா அந்த டிரைலரை தற்போது வெளியிட்டுள்ளார். தெலுங்கிலும் லவ் டுடே பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X