நல்ல நண்பன்.. கார் பரிசளித்த பிரதீப் ரங்கநாதன்.. அடடே கூட ஒரு உம்மாவும் கொடுத்திருக்காரே!

சென்னை: தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் தனது கடினமான உழைப்பு மற்றும் திறமையால் தொடர்ந்து வெற்றிகளை கொடுத்து வருபவர் பிரதீப் ரங்கநாதன். இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் தொடங்கி, நடித்து வெளியான படங்கள் வரை என அனைத்தும் ஹிட்.. சூப்பர் ஹிட்.. பிளாக் பஸ்டர் ஹிட். இப்படி இருக்கும்போது, பிரதீப் ரங்கநாதன் தனது நீண்ட கால நண்பன் ரமேஷ்க்கு கார் பரிசளித்துள்ளார்.

பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக காலடி எடுத்து வைத்தார், அதன் பின்னர் தனது இயக்கத்தில் லவ் டுடே என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக உருவெடுத்தார். கோமாளி கொடுத்த பிளாக் பஸ்டர் ஹிட், அதன் பின்னர் லவ் டுடே படம் கொடுத்த மிகப்பெரிய வெற்றி பிரதீப் ரங்கநாதனை வெற்றி கதாநாயகனாக மாற்றியது. இயக்குநராகவும் கதாநாயகனாகவும் அடுத்தடுத்து ஹிட் கொடுத்த பிரதீப் ரங்கநாதனுக்கு அடுத்து மிகப்பெரிய வெற்றியாக மாறிய படம் டிராகன். தொடர்ந்து பாக்ஸ் ஆபீஸில் ரூபாய் 100 கோடிகளுக்கு மேல் வசூல்களைக் குவித்தது.

Pradeep Ranganathan Gives Car To His Friend And Co - Director Ramesh Narayanan Video

அதேபோல் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆன டியூட் படம் பெரிய வெற்றியைக் குவித்தது. இந்த படமும் பாக்ஸ் ஆபீஸில் ரூபாய் 100 கோடிகளுக்கு மேல் வசூல் குவித்து பிரமாதப்படுத்தியது. பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம், எல்.ஐ.கே. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் டிசம்பர் மாதம் 18ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தின் மீதும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

விஸ்வாசம்: இப்படி இருக்கையில் தனது சினிமா வாழ்க்கை அதற்கு முந்தைய நாட்களிலும் நெருங்கிய நண்பராக இருந்து வருபவர் இயக்குநர் ரமேஷ். இவர் பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே படத்தின் இணை இயக்குநராக பணியாற்றியவர். அதேபோல் கோமாளி படத்தில் அசோசியேட் இயக்குநராக பணியாற்றி உள்ளார். இப்படி இருக்கும்போது தனது இணை இயக்குநர் ரமேஷ்க்கு தனது அன்புப் பரிசாக கார் வாங்கிக் கொடுத்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். இது மட்டும் இல்லாமல், காரைக் கொடுக்கும்போது, " சிறப்பான வேலை செய்து வருகிறீர்கள். உங்களது விஸ்வாசத்துக்கு எனது சிறிய அன்புப் பரிசு. இது தொடக்கம் தான். நாம் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டி இருக்கு. ரொம்பவும் நன்றி, லவ் யூ" என்று சொல்லி ஒரு முத்தமும் கொடுத்து காரை அன்பளிப்பாக கொடுத்துள்ளார் பிரதீப் ரங்கநாதன்.

Pradeep Ranganathan Gives Car To His Friend And Co - Director Ramesh Narayanan Video

முதல் கார்: காரை அன்புப் பரிசாக பெற்றுக் கொண்ட இயக்குநர் ரமேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். மேலும், " என்னுடைய முதல் கார். எனது நண்பன் எனக்கு வாங்கிக் கொடுத்தது. இது வெறும் பரிசு மட்டும் அல்ல. இது நம்பிக்கை. நாம் இணைந்து பயணித்ததற்காக ஒரு அடையாளம். இந்த அழகான நினைவுக்காகவும் என் மீது எப்போதும் பாசமாக இருப்பதற்காகவும் நன்றி சகோதரா.இந்த தருணம் எப்போதும் பயணத்தையும் நாம் கட்டியெழுப்பிய உறவையும் எனக்கு நினைவூட்டும். அது இந்த காரை விடவும் நீடித்து நிலைக்கும் நினைவு என்று கூறினார். இவரது இந்த பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X