பிரதீப் ரங்கநாதனுக்கு அடித்த ஜாக்பாட்... கோடிகளில் சம்பளம்... தேடிவரும் ஹீரோ, டைரக்டர் சான்ஸ்!

சென்னை: கோமாளி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், கடந்தாண்டு லவ் டுடே படத்தை இயக்கியிருந்தார்.

2கே கிட்ஸை கார்னர் செய்து எடுக்கப்பட்ட இந்தப் படம் அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

லவ் டுடே படத்தை டைரக்ட் செய்ததோடு, அவரே ஹீரோவாகவும் நடித்து அசத்தியிருந்தார்.

இந்தப் படம் 100 கோடி வரை வசூலித்துள்ளதால், பிரதீப் ரங்கநாதனுக்கு அடுத்தடுத்து ஹீரோவாக நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருகிறதாம்.

லவ் டுடே கொடுத்த சூப்பர் ஹிட்

லவ் டுடே கொடுத்த சூப்பர் ஹிட்

2019ம் ஆண்டு வெளியான கோமாளி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். ஜெயம் ரவி ஹீரோவாக நடித்து குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம், பாக்ஸ் ஆபிஸில் 60 கோடி வரை வசூலித்தது. இதனைத் தொடர்ந்து பிரதீப் இயக்கிய லவ் டுடே திரைப்படம் கடந்தாண்டு வெளியாகி சக்கைப்போடு போட்டது. அவரே ஹீரோவாக நடித்திருந்த இந்தப் படத்தில் இவானா ஹீரோயினாக நடித்திருந்தார்.

விஜய்க்கு கதை சொன்ன பிரதீப்

விஜய்க்கு கதை சொன்ன பிரதீப்

லவ் டுடே திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்று சூப்பர் ஹிட்டானது. யுவனின் இசையில் பாடல்களும் பட்டையைக் கிளப்பின. 10 முதல் 12 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி வரை வசூலித்து மாஸ் காட்டியது. இதனைத் தொடர்ந்து தளபதி விஜய்க்கும் கதை சொன்ன பிரதீப், விரைவில் அந்தப் படத்தை இயக்குவேன் எனவும் கூறியிருந்தார். இந்நிலையில், இதுவரை தயாரிப்பாளர்களைத் தேடிச் சென்ற பிரதீப் ரங்கநாதனுக்கு, தற்போது அவரை தேடி வாய்ப்புகள் வந்து குவிகிறதாம்.

சம்பளத்தை உயர்த்திய பிரதீப்

சம்பளத்தை உயர்த்திய பிரதீப்

லவ் டுடே திரைப்படத்தின் கதையை முதலில் லைகா நிறுவனத்தில் தான் பிரதீப் கூறியதாக சொல்லப்படுகிறது. ஆனால், இறுதியாக அந்த வாய்ப்பு ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு சென்றதோடு, பாக்ஸ் ஆபிஸிலும் பெரிய லாபத்தை பெற்றுக் கொடுத்தது. இதனால், இப்போது பிரதீப் ரங்கநாதனுக்கு ஹீரோ, டைரக்டர் என இரண்டு பக்கமும் வாய்ப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. இதுதான் சரியான நேரம் என தனது சம்பளத்தை இரண்டு மடங்கு வரை உயர்த்திவிட்டாராம் பிரதீப்.

விக்னேஷ் சிவன் படத்தில் ஹீரோ

விக்னேஷ் சிவன் படத்தில் ஹீரோ

அதன்படி ஹீரோவாக நடிக்க 2 கோடி ரூபாய் வரை சம்பளம் கேட்பதாக சொல்லப்படுகிறது. அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்கும் வாய்ப்பு தன்னிடம் இருந்து நழுவியதால், அடுத்து ஒரு சூப்பர் ஹிட் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் விக்னேஷ் சிவன். அதனால், அவரது அடுத்த படத்தில் விஜய் சேதுபதியுடன் பிரதீப் ரங்கநாதனையும் ஹீரோவாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளாராம். அதற்காக பிரதீப் 2 கோடி ரூபாய் சம்பளம் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

விரைவில் அடுத்த பட அறிவிப்பு

விரைவில் அடுத்த பட அறிவிப்பு

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஹீரோவாக நடிப்பது மட்டும் இல்லாமல், பிரதீப் ரங்கநாதனும் ஒரு படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்திலும் அவரே ஹீரோவாக நடிக்கலாம் எனக் கூறப்படுகிறது. மேலும், ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளதாம். இதுகுறித்து விரைவில் அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X