LIK Trailer: எதிர்காலத்துல பிரேக்-அப் இப்படித்தான் இருக்கப்போகுதா? ஜாலியான LIK டிரைலர் ரிலீஸ்!
சென்னை: இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் LIK அதாவது லவ் இன்சுரன்ஸ் கொம்பனி. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா, சீமான், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து உருவாகி உள்ளது. படத்தை எஸ்.எஸ். லலித் குமார் மற்றும் நயன்தாரா என இருவரும் இணைந்து நடித்துள்ளனர். படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் LIK . கடந்த ஆண்டே படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிந்து விட்ட நிலையில் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற கேள்வி பலருக்கும் இருந்து வருகிறது. கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான டிராகன் படத்துடன் இந்த படமும் வெளியாகும் என்ற பேச்சுக்களும் அடிபட்டது, ஏன் அறிவிப்புகளுமே வெளியானது. ஆனால் டியூட் மற்றும் LIK என இரண்டுமே பிரதீப் ரங்கநாதன் நடித்த படம் என்பதால் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட்டது.
அடுத்ததாக படம் காதலர் தினத்திற்கு வெளியாகும் என்று பேச்சுக்கள் அடிபட்டது. ஆனால் பிப்ரவரி 19ஆம் தேதி ஜன நாயகன் படம் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளது என்ற புரளி திரைத்துறையில் கிளம்பியதால் அந்த முயற்சியை படக்குழு கைவிட்டதாக கூறப்பட்டது. ஒரு வழியாக படத்தை ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு தீர்க்கமான முடிவை எடுத்துவிட்டனர்.
டிரைலரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தில் சீமான் என்ன கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதுதான். சீமான் பசுமை உலகம் என்ற விருப்ப சிறைச்சலை நடத்தி வருபவராக நடித்துள்ளார். இது அவரது அரசியல் நிலைப்பாட்டிற்கும், தினசரி வாழ்வியலுக்கும் ஒத்துப் போவதால் தான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க சீமான் ஒப்புக் கொண்டுள்ளார் என்று ரசிகர்கள் அவரைப் பாராட்டி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











