பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கானுடன் திடீர் சந்திப்பு... ரசிகர்களை குழப்பும் பிரதீப் ரங்கநாதன்!
சென்னை: பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. படம் வெற்றியானதால் உற்சாகத்தில் இருக்கிறார் பிரதீப். இதனிடையே பாலிவுட் நடிகர் அமீர்கானுடன் பிரதீப் இருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த மீட்டிங் எதற்கு என்று தெரியவில்லை. ரசிகர்கள் பலரும் சமூகவலைதளத்தில் அவரிடம் கேள்வி கேட்டு தொல்லை செய்து வருகின்றனர்.
கடும் விமர்சனம்: கோமாளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனவர் பிரதீப் ரங்கநாதன். பின்னர், அடுத்த படம் யாரை வைத்து இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், லவ் டுடே படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார். இவர் ஹீரோவாக நடிக்கின்றார் என்றதும் சில கடுமையான விமர்சனங்கள் வந்தன. ஆனாலும், தன் மீது முழு நம்பிக்கை வைத்து லவ் டுடே திரைப்படத்தின் மூலம் களமிறங்கினார். 5 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் 100 கோடிக்கு மேல் வசூலித்தது.

பதிலடி கொடுத்த நடிகர்: லவ் டுடே படத்தின் வெற்றியின் மூலம் தன்னை விமர்சித்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தார் பிரதீப். ஹீரோவாக நடித்த முதல் படமே 100 கோடி வசூலை குவித்ததால் தமிழ் சினிமாவில் சென்ஷேசன் ஹீரோவாக உருவெடுத்துள்ளார். இதனை தொடர்ந்து அவரது நண்பரான அஸ்வத் மாரிமுத்து இயக்கும் டிராகன் படத்தில் ஹீரோவாக நடித்தார்.
நண்பர்களின் வெற்றி: ஏஜிஎஸ் நிறுவனம் இருவர் மீது நம்பிக்கை வைத்து இப்படத்தை தயாரித்தது. படம் குறித்த செய்திகள் வெளியானபோதே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. 2 நாட்களுக்கு முன்பு வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. மேலும், படம் வெளியான முதல் நாளே பாசிட்டிவான விமர்சனங்களும், பாராட்டுக்கள் மட்டுமே கிடைத்துள்ளது. இப்படம் 100 கோடி வசூலை எட்டும் எனவும் கூறப்படுகிறது. நண்பர்களாக இருந்து இப்படத்தில் அஸ்வத் மாரிமுத்து, பிரதீப் ரங்கநாதன் வெற்றி பெற்றுள்ளனர்.
அமீர்கானுடன் திடீர் சந்திப்பு: டிராகன் திரைப்படம் வெற்றி படமாக உருவெடுத்துள்ள நிலையில், பிரதீப் ரங்கநாதனின் மார்க்கெட்டும் உயர்ந்துள்ளது. இந்நிலையில், பாலிவுட் நடிகர் அமீர்கானை சந்தித்து பேசியது குறித்து சமூகவலைதள பக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த சந்திப்பு எதற்கு, பாலிவுட்டில் நடிக்க போகிறாரா, டிராகன் படம் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளதா என பல கேள்விகளை நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.
இந்தியில் பிளாப்: பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான லவ் டுடே படம் இந்தியில் ரீமேக் ஆனது. இப்படத்தில் அமீர்கானின் மகன் ஜூனைத் கானும், ஸ்ரீதேவியின் 2வது மகள் குஷி கபூரும் லவ்யாபா என்ற படத்தில் நடித்தனர். தமிழில் மெகாஹிட் அடைந்த லவ் டுடே, இந்தியில் படுதோல்வி அடைந்தது. வசூலிலும் பெரிய நம்பர்களை தொடவில்லை. இந்நிலையில், டிராகன் படத்தை பார்த்து பிரதீப் ரங்கநாதனை பாராட்டியிருப்பார் எனக் கூறப்படுகிறது.
சென்னையில் அமீர்கான்: அமீர்கானின் தாயார் ஜூனத் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வெள்ளம் வந்தபோதும் தாயாருடன் படகில் மீட்கப்பட்ட புகைப்படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை பிரதீப் ரங்கநாதன் மருத்துவமனையில் அவரது தாயாரின் உடல் நலம் குறித்து விசாரித்திருக்கலாம். அப்போது எடுத்த புகைப்படமாக கூட இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











