விஜய்யை கலாய்த்து பிரதீப் போட்ட ட்வீட்டால் டிராகனுக்கு சிக்கல்.. கொளுத்தி போட்ட ப்ளூ சட்டை மாறன்

சென்னை: அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தனுஷ் இயக்கியுள்ள NEEK படத்தையும் ஓவர்டேக் செய்து வருகிறது. இந்த நேரத்தில் சில வருடங்களுக்கு முன்பு பிரதீப் ரங்கநாதன் நடிகர் விஜயை கிண்டல் செய்து போட்ட எக்ஸ் தள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு ப்ளூ சட்டைமாறன் பிரதீப் ரங்கநாதனை கலாய்த்து பதிவிட்டுள்ளார்.

சாதனை மேல் சாதனை: டிராகன் படம் ரிலீஸ் ஆன 2 நாட்களில் மாபெரும் வெற்றியை பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது. டிராகன் திரைப்படம் டிக்கெட் புக்கிங்கில் புதிய சாதனை படைத்துள்ளது. இப்படம் நேற்று மட்டுமே புக் மை ஷோ ஆப்பில் 288K டிக்கெட்ஸ் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புக் மை ஷோ ஆப்பில் 2024 முதல் 2025 இதுவரை வார சனிக்கிழமை அன்று அதிக டிக்கெட் புக் செய்யப்பட்ட படங்களில் நான்காவது இடத்தை டிராகன் பிடித்துள்ளது. விஜய், அஜித் படங்களுக்கு கிடைக்காத வரவேற்பு என தெரிவித்துள்ளனர்.

Pradeep Ranganathan vijay Blue sattai maran

டிராகனுக்கு பெரிய ஆப்பு: டிராகன் திரைப்படம் வெற்றிகரமாக திரையில் ஓடிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் விஜயை கிண்டல் அடித்து பிரதீப் ரங்கநாதன் போட்ட ட்வீட் ஒன்றை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர். இதனால், டிராகன் படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.விஜய் ரசிகர் ஒருவர் ஜில்லா பட ரிலீஸின் போது விஜய் இதுவரை பேசிய டப்பிங்கில் இது சிறந்த டப்பிங் என பாராட்டியிருந்தார். அதற்கு பிரதீப் இந்த படம் சுறா 2 மாதிரி இருப்பதாகவும், உன்ன மாதிரி ஆளுங்களுக்கு இந்த படம் பிடிக்கதான் செய்யும் என நக்கலாக பேசியுள்ளார். இதனை விஜய் ரசிகர்கள் வைரலாக்கி பிரதீப் ரங்கநாதனை வசைபாடி வருகின்றனர்.

விஜய் மீது வன்மம்: பிரதீப் ரங்கநாதனுக்கு ஆரம்பத்தில் இருந்தே வன்மம் இருப்பதாக நெட்டிசன்கள் தெரிவிக்கின்றனர். லவ் டுடே படம் ரிலீஸ் ஆன போதும் இதேபோன்று பிரச்னையை பிரதீப் சந்தித்தார். விஜய் நடிப்பை கிண்டல் செய்வது, அவரது படங்களை கலாய்ப்பதை மட்டுமே பிரதீப் வேலையாக வைத்துள்ளார் என்றும் கமாண்ட் செய்து வருகின்றனர். காட்டமான முறையில் டிராகன் படத்தை புறக்கணிப்போம் என்றும் விஜய் ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

பிரதீப்பை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்: எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் பிரதீப் ரங்கநாதனை திரைப்பட விமர்சகர் ப்ளூசட்டை மாறன் கலாய்த்து பதிவிட்டுள்ளார். அதில், பிரதீப் சில வருடங்களுக்கு முன்பு விஜயை கலாய்த்து போட்ட ட்வீட்டை ஸ்கீரின் ஷாட்டுன் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த விஜய் ரசிகர்கள் அவரை கடுமையாக திட்டி வருகின்றனர்.

அதாவது, "கத்தி படம் ரிலீஸ் ஆன நேரத்தில் டிக்கெட் கிடைத்தது. ஆனால், லிங்கா படத்திற்கு 3 நாட்களாக டிக்கெட் கிடைக்கவில்லை என பிரதீப் பதிவிட்டுள்ளார். பின்னர் அந்த பதிவை கலாய்க்கும் படி "நல்லா உருட்டிருக்க பிரதீப் ரங்நாதா" என ப்ளூ சட்டை மாறன் தெரிவித்துள்ளார். இதற்கு விஜய் ரசிகர்கள் பிரதீப்பின் போஸ்டை வைரலாக்கி வருகின்றனர். பிரதீப் ரங்கநாதன் இன்னும் திருந்தவில்லை என்றும் கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X