Pradeep Ranganathan: பிரதீப் ரங்கநாதன் கேட்ட சம்பளம்... ஆடிப்போன கமல்... அடேங்கப்பா இத்தனை கோடியா?
சென்னை: கோமாளி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். ஜெயம் ரவி ஹீரோவாக நடித்த இந்தப் படம் பிரதீப் ரங்கநாதனுக்கு நல்ல அறிமுகம் கொடுத்தது.
அதனைத் தொடர்ந்து அவரே ஹீரோவாக நடித்து இயக்கிய லவ் டுடே, பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வரை வசூலித்தது. இதனால் அவருக்கு அதிகமான ஆஃபர்கள் வர, ஒரு படத்திற்காக பிரதீப் ரங்கநாதன் கேட்ட சம்பளத் தொகையை பார்த்து கமல்ஹாசனே ஆடிப்போய்விட்டாராம்.

பிரதீப் ரங்கநாதன் சம்பளம் இத்தனை கோடியா
ஜெயம் ரவி ஹீரோவாக நடித்த கோமாளி திரைப்படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருந்தார். முதல் படத்திலேயே முத்திரை பதித்த பிரதீப் ரங்கநாதன், அடுத்து லவ் டுடே-வை இயக்கினார். இந்தப் படத்தில் அவரே ஹீரோவாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. பிரதீப் ரங்கநாதன் ஜோடியாக இவானாவும், சத்யராஜ், ராதிகா, யோகி பாபு ஆகியோர் லீடிங் ரோலிலும் நடித்திருந்தனர்.
2கே கிட்ஸின் காதலை பின்னணியாக வைத்து உருவான இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. மேலும் 15 கோடி பட்ஜெட்டில் உருவான லவ் டுடே, 100 கோடி ரூபாய் வரை வசூலித்ததாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால் ஒரே படத்தில் பிரதீப் ரங்கநாதனின் மார்க்கெட் வேல்யூ உச்சம் தொட்டது. அதே வேகத்தில் தளபதி விஜய்க்கும் கதை சொல்லியிருந்தார் பிரதீப் ரங்கநாதன்.
இதனையடுத்து பிரதீப் ரங்கநாதனுக்கு 20க்கும் மேற்பட்ட தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து அழைப்பு வந்ததாக சொல்லப்படுகிறது. ஹீரோ அல்லது இயக்குநர் என இரண்டு பக்கங்களும் பிரதீப் ரங்கநாதனுக்கு ஆஃபர்கள் பறந்தன. ஆனால் அவர் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க ரெடியாகியுள்ளார். இந்தப் படத்தை முதலில் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கவிருந்தது.
ஆனால், படத்தின் பட்ஜெட் 60 கோடி என விக்னேஷ் சிவன் சொன்னதால், ராஜ்கமல் பிலிம்ஸ் ஓகே சொல்லவில்லையாம். இதில் விக்னேஷ் சிவன் சம்பளம் 10 கோடியாகவும், பிரதீப் ரங்கநாதனின் சம்பளம் 20 கோடி என்றும் சொல்லப்படுகிறது. இதனைக் கேட்ட கமல்ஹாசன் ஆடிப்போய்விட்டாராம். ஒரு படத்தில் ஹிட் கொடுத்துவிட்டு 20 கோடி சம்பளம் என்றால் செட் ஆகாது என நோ சொல்லிவிட்டாராம். அப்படியிருந்தும் பிரதீப் ரங்கநாதன் தனது சம்பளத்தை குறைக்கவில்லையாம்.
இதனையடுத்து இந்தப் படத்தை லலித் குமாரின் 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கலாம் என க்ரீன் சிக்னல் கொடுத்துள்ளதாம். முக்கியமாக பிரதீப் ரங்கநாதன் கேட்ட 20 கோடி ரூபாய் கொடுக்கவும் தயாரிப்பு நிறுவனம் ரெடியாக உள்ளதாகத் தெரிகிறது. பிரதீப் ரங்கநாதனின் சம்பளம் 20 கோடியா என இப்போது கோலிவுட்டே அதிர்ச்சியில் இருந்து மீளவில்லையாம்.


Click it and Unblock the Notifications











