100 கோடியை நெருங்கும் லவ் டுடே… பாக்ஸ் ஆபிஸில் டாப் ஹீரோக்களை கதிகலங்க வைத்த பிரதீப்?

சென்னை: பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ள லவ் டுடே திரைப்படம் கடந்த 4ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

பிரதீப் ரங்கநாதன் இயக்கி அவரே ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படம், இப்போது தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.

முதல் நாளில் இருந்தே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற லவ் டுடே, பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது.

சூப்பர் ஹிட் அடித்த லவ் டுடே

சூப்பர் ஹிட் அடித்த லவ் டுடே

ஜெயம் ரவி நடித்த கோமாளி படம் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் முதல் படத்திலேயே கவனம் ஈர்த்தார். இந்தப் படம் 25 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகி, 50 கோடிக்கும் மேல் வசூலித்தது. அதனைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ள திரைப்படம் லவ் டுடே. இயக்குநராக மட்டும் இல்லாமல் பிரதீப் ரங்கநாதனே ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 2கே கிட்ஸ் மட்டுமின்றி அனைத்து ரசிகர்களும் இந்தப் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

பாக்ஸ் ஆபிஸில் சாதனை

பாக்ஸ் ஆபிஸில் சாதனை

தமிழில் சூப்பர் ஹிட் அடித்த லட் டுடே, தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸானது. வாரிசு படத்தை தயாரித்து வரும் தில் ராஜூவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸும் ஏஜிஎஸ் நிறுவனமும் இணைந்து லவ் டுடே படத்தை தெலுங்கில் வெளியிட்டன. கடந்த 18ம் தேதி தெலுங்கில் ரிலீஸான லவ் டுடே, அங்கும் மாஸ் ஹிட் கொடுத்துள்ளது. இந்நிலையில், தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸில் தரமான வசூல் செய்து வரும் லவ் டுடே, இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் 55 கோடி ரூபாய் கலெக்‌ஷன் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

100 கோடியை நெருங்கும் லவ் டுடே

100 கோடியை நெருங்கும் லவ் டுடே

அதேபோல், உலகம் முழுவதும் இதுவரை 70 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. பத்து கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான லவ் டுடே, 70 கோடி வசூலை கடந்துள்ளது, கோலிவுட் திரையுலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மேலும், தொடர்ந்து லவ் டுடே படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்து வருவதால், இன்னும் ஒரே வாரத்தில் 100 கோடி கிளப்பில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னணி ஹீரோக்களின் படங்களே தடுமாறும் நிலையில், லவ் டுடே வசூலில் சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விரைவில் அடுத்த படம்

விரைவில் அடுத்த படம்

லவ் டுடே படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் இவானா சத்யராஜ், ராதிகா முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளனர். 2கே கிட்ஸ்களின் காதல் எப்படி இருக்கிறது ஜாலியாக காட்டியுள்ளார் பிரதீப். இந்தப் படத்திற்கு கிடைத்துள்ள சிறப்பான வரவேற்பு குறித்து பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சியாக தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், பிரதீப் இயக்கும் புதிய படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும், அதில், அவரே ஹீரோவாக நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X