லவ் டுடே 5ம் நாள் வசூல்..படத்தின் மொத்த பட்ஜெட்டையும் தட்டி தூக்கியது!
சென்னை : பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவான லவ் டுடே படத்தின் ஐந்தாவது நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
கோமாளி படத்தின் மூலம் இயக்குனரான பிரதீப் ரங்கநாதன் அடுத்து லவ் டுடே என்ற படத்தை இயக்கி இதில் நடித்தும் இருக்கிறார்.
லவ் டுடே படத்தின் டிரைலர் வெளியானதிலிருந்து படத்தின் மீதான எதிர்பார்த்து டீன் ஏஜ் ரசிகர்களுக்கு அதிகரித்து பட வெளியீட்டுக்காக காத்திருந்தனர்.

லவ் டுடே
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தில்,ஹீரோவாக பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக இவானா இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வருகின்றனர். இவர்களின் காதல் விவகாரம் இவானாவின் தந்தை சத்யராஜுக்கு தெரியவர அவர் இருவரும் தங்கள் செல்போனை ஒரு நாள் மட்டும் மாற்றி வைத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு இருவர் உறவும் சுமுகமாக இருந்தால் திருமணத்தை பற்றி யோசிக்கலாம் என்று நிபந்தனை விதிக்கிறார்.

பெரும்பாலான திரையரங்கில்
செல்போன் மாறிய பிறகு நடக்கும் இதன் பின் என்ன ஆனது என்பதே லவ் டுடே படத்தின் கதையாகும். நவம்பர் 4ந் தேதி வெளியான இத்திரைப்படம் முதல் நாளில் பெரிதாக கலெக்சன் இல்லை. பின்பு ரசிகர்களின் விமசனங்கள், ப்ரோமோஷன்ஸ் மூலம் இப்பொழுது படம் நன்றாக ஓடுகிறது. தியேட்டர் உரிமையாளர்கள் இரண்டாம் வாரத்தில் இன்னும் சில காட்சிகளை திரை அரங்குகளில் ஒடுகிறது.

வசூலில் மாஸ்
பாக்ஸ் ஆபிஸில் முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கே டஃப் கொடுத்துள்ள லவ் டுடே வசூலில் மாஸ் காட்டி வருகிறது. அதன்படி இதுவரை மொத்தமாக இப்படம் 20 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில் அந்த வசூலை ஐந்து நாட்களில் லவ் டுடே படம் எடுத்துள்ளது. நான்காவது நாள் முடிவில் தமிழ் நாட்டில் மட்டும் 3.15 கோடி வசூல் செய்துள்ளது. மொத்தமாக லவ் டுடே படம் நான்கு நாட்களில் 17.75 கோடியும், ஐந்தாவது நாட்களில் இப்படம் ரூ. 20 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

நான் கேட்பதும் காண்பதும் நிஜமா?
இயக்குனர் பிரதீப் ரங்கநாதன வெளியிட்டுள்ள நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், இது நிஜமாகவே நடந்து கொண்டிருக்கிறதா? நான் கேட்பதும் காண்பதும் நிஜமா? ஒவ்வொரு நாளும் படத்தின் காட்சிகளும் நள்ளிரவு காட்சிகளும் தியேட்டர் ஆக்கிரமிப்பும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. பல இடங்களில் காலை காட்சிகள் ஹவுஸ் ஃபுல் ஆவதையும் குடும்பங்கள் வருவதையும் ரசிகர்கள் மறுமுறை பார்ப்பதையும் பார்த்தேன் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications