கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா? பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாகும் ஸ்ரீலீலா மற்றும் மீனாக்ஷி சௌத்ரி!
சென்னை: அடுத்தடுத்த வெற்றிப்படங்களை கொடுத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த, குறிப்பாக இளசுகளை கவர்ந்த நடிகராக பிரதீப் ரங்கநாதன் இருக்கிறார். இவர் நடித்த LIK திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், பிரதீப் ரங்கநாதன் தனது அடுத்த படத்தை தானே இயக்கி நடிக்க உள்ளார். இந்த படத்தில் பராசக்தி பட புகழ் ஸ்ரீலீலா மற்றும் மீனாட்சி சௌத்ரி கமிட் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கோமாளி படத்தை இயக்கி தமிழ் ஆடியன்ஸ் மனதில் இடம் பிடித்த பிரதீப் ரங்கநாதன், லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனார். அந்த படத்தில் தனது இயல்பான மற்றும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று பாக்ஸ் ஆபிசில் நல்ல வசூலை அள்ளியது. அந்த படத்தை தொடர்ந்து, அஸ்வந்த் மாரிமுத்து இயக்கிய டிராகன் படத்தில் நடித்தார். அந்த படமும் இளம் கல்லூரி மாணவர்களுக்கு பிடித்து இருந்ததால், நன்றாக கல்லா கட்டியது. இந்த ஆண்டு கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் டியூட் திரைப்படத்தில் நடித்தார். பிரதீப் ஹீரோவாக நடித்த மூன்றாவது படத்தில் மமிதா பைஜூ, சரத்குமார், ரோகிணி என பலர் நடித்து இருந்தனர். இந்த படத்தில் கௌரவ கொலை குறித்தும், பெண்களை ஆண்கள் எப்படி மதிக்க வேண்டும் என கருத்து ஊசி போடும் படமாக இப்படம் இருந்தது.

பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படம் : பின் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் LIK திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் மீண்டும் இயக்குனராக உருவெடுக்கவுள்ளார். அவரே இயக்கி அதில் ஹீரோவாக நடிக்கவுள்ளார். அப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளனர். இதுவரை பிரதீப் ரங்கநாதன், கல்லூரி மாணவராக ஜாலியாகத்தான் நடித்து இருந்தார். ஆனால், அடுத்த படத்தில் அதிரடியான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இதில் கதாநாயகியாக நடிகை பராசக்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஸ்ரீலீலாவும், கோட் பட நடிகை மீனாட்சி சௌத்ரியும் கமிட் ஆகியுள்ளனர். LIK திரைப்படம் பிப்ரவரி மாதம் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கும் நிலையில் அந்த படம் வெளியான பின், தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை பிரதீப் ரங்கநாதன் வெளியிட உள்ளார்.


Click it and Unblock the Notifications











