உஷாரான பிரதீப் ரங்கநாதன்.. LIK பட புரோமோஷனில் ஹைதராபாத்தில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம்!
ஹைதராபாத்: இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே சூர்யா, கீர்த்தி ஷெட்டி, சீமான் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் இந்த படத்திற்கு அனிருத் திசையமைத்துள்ளா.ர் செவன் ஸ்டார் லலித் மற்றும் நடிகை நயன்தாரா இணைந்து படத்தை தயாரித்துள்ளனர். படம் ஏப்ரல் 10 தேதி வெளியாகிறது. தமிழ் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் படம் வெளியாவதால் படத்திற்கான புரமோஷன் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டுள்ளன.
இந்நிலையில் படத்தின் புரோமோஷன்காக ஹைதராபாத் சென்ற பட குழு புரோமோஷன் வேலைகளை மிகச் சிறப்பாக செய்து முடித்துள்ளனர் என்று கூறும் அளவுக்கு புரோமோஷன் செய்துள்ளனர். குறிப்பாக படத்தின் கதாநாயகனான பிரதிப் ரங்கநாதன் தனது முந்தைய படமான டியூட் படத்தின் புரோமோஷனின் போது தனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தை பகிர்ந்து, LIK படத்திற்கான புரோமோஷனில் மிகச் சாதுரியமாக நடந்து கொண்ட விதம் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

செம்ம சம்பவம்: அதாவது கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான பிரதீப் ரங்கநாதனின் டியூட் படத்தின் புரோமோஷனுக்காக ஹைதராபாத் சென்றிருந்தார். அப்போது தனக்கு தெலுங்கு தெரியாது என்பதால் தான் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கூறுவதை தெலுங்கில் மொழிமாற்றம் செய்து கூற ஒருவரை ஏற்பாடு செய்திருந்தார். அவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்ட நபரும் பிரதீப் ரங்கநாதன் கூறியதை மொழிபெயர்ப்பு செய்தது மட்டுமில்லாமல் கொஞ்சம் சுவாரசியமாக நகைச்சுவையாக பேசி இருந்தார். இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவி இருந்தது மேலும் பலரது கவனத்தை ஈர்த்தது.
மொழிபெயர்ப்பு: இந்நிலையில் LIK படத்தின் புரோமோஷனுக்காக பிரதீப் ரங்கநாதன் சாதுரியமாக ஒரு முடிவை எடுத்துள்ளார். அதாவது மொழிபெயர்ப்பாளராக ஒருவரை நியமிப்பதை காட்டிலும் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தான் ஆங்கிலத்தில் கூறுவதை அப்படியே தெலுங்கில் மொழி மாற்றம் செய்துவிட்டார். இதை அவர் மேடையிலேயே செய்ததால் ரசிகர்கள் பலரும் அவரது சாதுரியமான இந்த செயலை பாராட்டி வருகின்றனர். மேலும் தான் தனது கடந்த படத்தின் புரோமோஷனின்போது தான் ஏற்பாடு செய்திருந்த மொழிபெயர்ப்பாளரால் பங்கமாக கலாய்க்கப்பட்டேன் என்றும் தெரிவித்துள்ளார் இது தொடர்பான வீடியோக்கள் அனைத்து வேகமாக பரவி வருகிறது.

ரிலீஸ்: எல் ஐ கே படம் கடந்த ஆண்டு தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் டியூட் படத்தோட வெளியாகும் என்று அறிவிப்புகள் எல்லாம் வெளியானது. இதனால் ஒரே நடிகரின் இரண்டு படங்கள் ஒரே தேதியில் ரிலீஸ் ஆகிறது என்ற பேச்சுக்கள் எல்லாம் எழுந்தது. ஆனால் கடைசி நேரத்தில் டியூட் படம் மட்டுமே வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் எல் ஐ கே படம் வரும் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது.


Click it and Unblock the Notifications











